என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

பூதத்திற்கு இரையாக சென்ற நம்பாடுவானை வழிமறித்த பெருமாள்
- சத்தியத்தைவிட உயிர் பெரிதல்ல. பூதத்தின் பசியைப் போக்குவதைவிட இந்த உடல் பெரிதுமல்ல.
- பூதத்தை திருப்திப்படுத்துவதே என் திருப்தி என்றார். அதைக்கேட்ட முதியவர் சுயஉருவைக் காட்டினார்.
பெருமானின் தரிசனம் கிடைத்த சந்தோஷம் ஒரு பக்கம், பிரம்மராட்ச பூதம் பசியைத் தீர்க்க வேண்டும் என்கிற எண்ணம் மறுபுறம்.
வேகமாக நடந்தார்.
அப்போது முதியவர் ஒருவர் வந்தார். அவர் நம்பாடுவாரிடம் இவ்வளவு அவசரமாக எங்கே போகிறாய்? என்று கேட்டார்.
அவரது தோற்றமும் இனிய பேச்சும், நம்பாடுவாரை கவர்ந்தன.
மிகுந்த அடக்கத்துடன் தான் செல்லும் காரணத்தைச் சொன்னார். அதை கேட்ட முதியவர் சிரித்தார்.
இதென்ன பைத்தியக்காரத் தனம்? யாராவது வலியச் சென்று உயிரை விடுவார்களா?
உயிருக்கே ஆபத்தான சந்தர்ப்பத்தில் சொல்லப்படும் பொய் பாவமாகாது. போய் பிழைக்கும் வழியைப் பார் என்றார் அவர்.
சத்தியத்தைவிட உயிர் பெரிதல்ல. பூதத்தின் பசியைப் போக்குவதைவிட இந்த உடல் பெரிதுமல்ல.
எனவே பூதத்தை திருப்திப்படுத்துவதே என் திருப்தி என்றார் நம்பாடுவார்.
அதைக்கேட்ட முதியவர் சுயஉருவைக் காட்டினார்.
Next Story






