search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பொன்னேரியில் ஒரு ஆயர்பாடி
    X

    பொன்னேரியில் ஒரு ஆயர்பாடி

    • கிருஷ்ணர் தனது கால்களை குறுக்காக வைத்துக் கொண்டு புல்லாங்குழல் வாசித்தப்படி நிற்கிறார்.
    • ஆதிகாலத்தில் இங்குள்ள எறும்பு மாலையில் பசுக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பால் சொரிந்தன.

    சென்னையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் மிகப்பழமையான கிருஷ்ணர் கோவில் உள்ளது. முதலாம் கரிகால் சோழன் கட்டியதால் இந்த தலத்து கடவுள் கரிகிருஷ்ணர் என்று அழைக்கப்படுகிறது.

    ஆதிகாலத்தில் இங்குள்ள எறும்பு மாலையில் பசுக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பால் சொரிந்தன. அதை கண்டு அந்த கிராம மக்கள் ஆச்சரியப்பட்டனர். அப்போது ஒலித்த அசரீரியில், ''பசும்பாலால் இந்த குன்றை கழுவுங்கள் கிருஷ்ணர் தோன்றுவார்'' என்று கேட்டது.

    கிராம மக்களும் அப்படியே செய்ய கிருஷ்ணர் தென்பட்டார். அப்போது ஒரு பக்தர் மிகுந்த ஆர்வத்துடன், அங்கு மண்ணைத் தோண்டினார். அப்போது கிருஷ்ணர் இதற்கு மேல் தோண்டாதே என்று உத்தரவிட்டார். இதனால் இத்தலத்தில் கிருஷ்ணர், சாதாரண மனிதர்கள் போல தரையில் கால் ஊன்றி நிற்கிறார்.

    பசுக்கள் பால் சுரந்து காட்டி கொடுத்து கிருஷ்ணரை வெளிப்படுத்தியதால் இத்தலம் ஆயர்பாடி என்றும் அழைக்கப்படுகிறது.

    புராதன சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் பால், பழம் வைத்து வழிபட்டால் கேட்டவரத்தை கிருஷ்ணர் தருவார். இங்கு ராமர், கிருஷ்ணர் இருவரும் தனி தனி சன்னதிகளில், தனி தனி கொடி கம்பங்களுடன் உள்ளனர். கிருஷ்ணை பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இது.

    பவளக்கார தெருவில் பாசமிகு கிருஷ்ணர்

    சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள், நன்மங்கலம் நீலவண்ண பெருமாள் போன்று பல இடங்களில் கிருஷ்ணருக்கு கோவில்கள் உள்ளன. அவைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. முத்தியால் பேட்டையில் உள்ள ஸ்ரீவேணு கோபால கிருஷ்ணசாமி கோவில்.

    பவளக்காரத் தெருவில் உள்ள இத்தலத்தில் கிருஷ்ணர் தனது கால்களை குறுக்காக வைத்துக் கொண்டு புல்லாங்குழல் வாசித்தப்படி நிற்கிறார். அவரது இருபுறமும் பாமாவும் ருக்மணியும் உள்ளனர். இத்தகைய தோற்றத்தில் கிருஷ்ணர் இந்த தலத்தில் விசேஷமாக அருள் பாலிக்கிறார்.

    சிறிய கோவிலாக இருந்தாலும், நுழைவாயிலை நெருங்கியதுமே அதன் பழமை சிறப்பை பக்தர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

    ஸ்ரீகிருஷ்ணா என்ற நாமத்துடன் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ராமர், ஆஞ்ச நேயர், சீனிவாச பெருமாளுக்கு தனி தனி சன்னதி உள்ளது. சென்னையில் உள்ள கிருஷ்ணா பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று இங்கு சென்று வழிபட்டால் உண்மையான மனநிறைவு ஏற்படும்.

    Next Story
    ×