search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆசைகளை நிறைவேற்றும் பூசம்
    X

    'ஆசை'களை நிறைவேற்றும் பூசம்

    • பன்னிரு கரத்தாலும் அள்ளிக் கொடுப்பதால்தான் ‘வள்ளல்’ என்று பெயர் பெற்றான் முருகன்.
    • நெல்லையில், தாமிரபரணி ஆற்றங்கரையில் தவமிருந்து இறைவனின் திருவருளினை பார்வதி பெற்றாள்.

    பூச நட்சத்திரம் தை மாதத்தில் வரும்பொழுது நாம் முருகப் பெருமானை வழிபட்டால் நம்முடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    தைப்பூசம் நாளில் முருகப் பெருமானைக் கொண்டாடுவதற்கு மார்கழி முதல் நாளிலேயே மாலை போட்டுக்கொண்டு காலை, மாலை இருவேளைகளிலும் குளித்து, கவச பாராயணங்களைப் படித்து வழிபட்டு வர வேண்டும்.

    பூசத்தன்று பழனிக்கு சென்று, அங்கு தங்க ரதத்தில் பவனி வரும் சண்முகநாதப் பெருமானை கோடானு கோடி பேர் தரிசித்து வருகின்றனர்.

    குன்றக்குடி, பழனி, திருத்தணி, திருச்செந்தூர், சுவாமி மலை போன்ற ஆலயங்களுக்கும், அறுபடை வீடுகளின் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கும் பாத யாத்திரையாக சென்று வழிபட்டு வந்தால் இன்னல்கள் விலகி அமைதியான, வளமான வாழ்க்கை அமையும்.

    பாத யாத்திரையாக நடந்து செல்ல இயலாதவர்கள் உள்ளூரில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அங்குள்ள முருகப் பெருமானை வழிபட்டு வர வேண்டும்.

    பன்னிரு கரத்தாலும் அள்ளிக் கொடுப்பதால்தான் 'வள்ளல்' என்று பெயர் பெற்றான் முருகன்.

    பூச நட்சத்திரத்தன்று பார்வதி தேவி, முருகப் பெருமானிடம் 'சக்திவேல்' கொடுக்க, அதை வாங்கிப் போர் புரிந்து, சூரபத்மனை மயிலும், சேவலும் ஆக்கிய மால்முருகனை மனதில் பூசத்தன்று நினைத்தாலே, போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும்.

    பூசத்தன்ற முழுநாளும் விரதமிருந்து பால், பழம் மட்டும் சர்பபிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தரப்பம் நைவேத்யம் படைத்து, முருகப் பெருமானை வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக மாறும்.

    தைப்பூசத்திருநாளில் எளிய முறையிலாவது பழனி ஆண்டவரை வேண்டித் துதியுங்கள். தைப்பூச விரதம் வறுமை போக்கும், தடைகளை தகர்க்கும், குழந்தைப்பேறுகள் கிடைக்கச் செய்யும், ஆரோக்கியம் அளிக்கும், வாழ்வு வளம் பெறச் செய்யும்.

    இந்நாளில் விரதம் கடைப்பிடித்து முருகப் பெருமானை வழிபட்டு, அன்னதானம் செய்ய வேண்டும். இதனால் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற மூன்றுவகை சக்திகளையும் பெற்று வளமுடன் வாழலாம் என்று ஞான நூல்கள் சொல்கின்றன.

    நெல்லையில், தாமிரபரணி ஆற்றங்கரையில் தவமிருந்து இறைவனின் திருவருளினை பார்வதி பெற்றாள். அந்த நாள் தைப்பூசம்.

    எனவே இந்தப் புனித நாளில் சுபகாரியங்கள் நடத்தினால் தம்பதிகள் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

    Next Story
    ×