என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

ஆலயங்கள் மற்றும் தீர்த்தங்களின் சிறப்புக்கள்:

- காவிரிக்கு தென்கரையில் சூரியனுக்கு அருளிய சக்கரபாணியாகிய நரசிம்மன் இருக்கிறார்.
- சக்கரபாணிக்கு நேர்கிழக்கில் பாணபுரீசர் ஸான்னித்தியமாயிருக்கிறார்.
* கன்னியா தீர்த்தக்கரையின் வடபக்கத்தில் வீற்றிருக்கும் நவகன்னியர்களோடு கூடிய காசிவிசுவநாதரை காண சகல அதிஷ்டங்கள் கைகூடும்.
* கீழ்கரையில் மேற்கு திசை நோக்கி இருக்கும் அபிமுக்தேசுவரரை தரிசிப்பவருக்கு மறுஜென்மமில்லை.
* மேல்கரையில் இருக்கும் கவுதமேசுவரனார் குபேர சம்பத்தை பக்தர்களுக்கு அளிக்கிறார்.
* வில்வ வனத்தில் நாகேசுவரர் மகாமக குளத்தின் வடமேற்கு மூலையில் இருக்கிறார், சிவஸாயுஜ்யம் அவரை தரிசிப்போருக்கு ஏற்படும்.
* சோமேசர் நாகேசருக்கு வடக்கு மூலையில் இருக்கிறார். குருவும் சந்திரனும் வழிபட்டு பேறு பெற்றர்கள்.
* சோமேசருக்கு வடக்கில் ஹேமமுனியின் தவம் சித்தியடைவத்தின் பொருட்டும், அசுரர்களை சம்ஹாரம் செய்யவும் ஸ்ரீ தேவியோடும் பூதேவியோடும் சாரங்கபாணியாய் இருக்கிறார்.
அவரை பார்த்த மாத்திரத்தில் பாவம் பறந்தோடுகிறது. விஷ்ணு சாயுஜ்யம் ஏற்படுகிறது. மகர சங்கராந்திதினத்தில் பொற்றாமரை ஸ்நானம் சிறப்பாகும்.
* ஆராவமுதனுக்கு நேர்மேற்கில் ஆதிகும்பேசுவரர் இருக்கிறார் கடும்தவம் செய்திருந்தாலொழிய அவர் தரிசனம் ஏற்படாது வெள்ளிக்கிழமையில் மங்களநாயகியின் தரிசனம் விசேஷ பலன் தரும்.
* கும்பநாதருக்கு தென்மேற்கில் தூமகேது முனிக்கு தரிசனமளித்த ஆதிகம்பட்ட விசுவநாதர் வீற்றிருக்கிறார்.
* கும்பேசுவாருக்கு வடக்கில் காவிரியின் தென்கரையில் பூவாரக பெருமாள் எழுந்தருளியிருக்கிறார்.
* காசியபருக்கு காட்சி கொடுத்த இலட்சுமி நாராயணர் காவிரி தீர்த்தில் இருக்கிறார்.
* காவிரிக்கு வடபக்கத்தில் ( மேலக் காவேரி ) மதங்கருக்கருளிய வரதராஜன் வீற்றிருக்கிறார்.
* காவிரிக்கு தென்கரையில் சூரியனுக்கு அருளிய சக்கரபாணியாகிய நரசிம்மன் இருக்கிறார்.
* சக்கரபாணிக்கு நேர்கிழக்கில் பாணபுரீசர் ஸான்னித்தியமாயிருக்கிறார்.
புராண காலத்திற்கு பின்தோன்றி சிறப்போடு விளங்கும் கோவில்கள்
1. காளாத்தி நாதன் (சிவன்கோவில்) 2. ராமஸ்வாமி (ராமர் கோவில்) 3. வரதராஜ பெருமாள் கோவில் 4. சரநாராயண பெருமாள் கோவில் (தசாவதார பெருமாள்) 5. வேதநாராயணன் (பிரம்மன் கோவில்)