search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் கீப்பர் சதத்தால் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக இந்தியா ‘ஏ’ 505 ரன்கள் குவிப்பு
    X

    விக்கெட் கீப்பர் சதத்தால் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக இந்தியா ‘ஏ’ 505 ரன்கள் குவிப்பு

    விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் சதமடிக்க இந்தியா ‘ஏ’ ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் 505 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. #INDAvAUSA
    இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா ‘ஏ’ 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தற்போது 2-வது ஆட்டம் ஆலுரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ‘ஏ’ மிட்செல் மார்ஷின் (113) சதத்தால் முதல் இன்னிங்சில் 346 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் ரவிக்குமார் சமர்த் (83), அபிமன்யு ஈஸ்வரன் (86) சிறப்பான அடித்தளம் அமைத்தனர். அதன்பின் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 42 ரன்களும், ஷுப்மான் கில் 50 ரன்களும் அடித்தனர்.

    6-வது வீரராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் (106) சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 52 ரன்கள் அடிக்க இந்தியா ‘ஏ’ 144 ஓவர்கள் விளையாடி 505 ரன்கள் குவித்தது.



    159 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா ‘ஏ’ 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா ‘ஏ’ 2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் அடித்துள்ளது. இன்னும் 121 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி உள்ளது.

    நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியின் விக்கெட்டை விரைவில் வீழ்த்தினால் இந்தியா ‘ஏ’ அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வாய்ப்புள்ளது.
    Next Story
    ×