search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுத்தாம்டன் டெஸ்ட் - ஜோஸ் பட்லர் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து 260/8
    X

    சவுத்தாம்டன் டெஸ்ட் - ஜோஸ் பட்லர் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து 260/8

    சவுத்தாம்டனில் நடைபெற்றும் வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. #INDvsENG
    லண்டன் :

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 76.4 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

    இதையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. புஜாராவின் சிறப்பாக சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சார்பில் மொயின் அலி 5 விக்கெட்டும், பிராடு 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர்.



    குக் 12 ரன்னிலும், ஜென்னிங்ஸ் 36 ரன்னிலும், மொயின் அலி 9 ரன்னிலும், ஜோ ரூட் 48 ரன்னிலும், பேர்ஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர். 

    ஜோஸ் பட்லர் மட்டும் பொறுப்பாக ஆடி அரை சதமடித்ததுடன், 69 ரன்னில் வெளியேறினார். இறுதியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. சாம் குர்ரன் 37 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளனர்.

    இந்தியா சார்பில் மொகமது ஷமி 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும்ம் எடுத்துள்ளனர். இங்கிலாந்து தற்போது 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. #INDvsENG
    Next Story
    ×