search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லார்ட்ஸ் டெஸ்ட் - மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 357/6
    X

    லார்ட்ஸ் டெஸ்ட் - மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 357/6

    இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் கிறிஸ் வோக்சின் அபார சதத்தால் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது.

    2ம் நாளான நேற்று டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்தியாவின் முன்னணி வீரர்கள் சொதப்பினர். கேப்டன் விராட் கோலி 23 ரன்னிலும், ரகானே 18 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய அஷ்வின் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில், இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
     
    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அத்துடன் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.



    இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதலில் ஷமியின் பந்து வீச்சில் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். இதனால் இங்கிலாந்து அணி 131 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

    அதன்பின், பேர்ஸ்டோவ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஜோடி நிதானமாக ஆடியது. இந்த ஜோடி 189 ரன்கள் சேர்த்தது. பொறுப்புடன் விளையாடிய பேர்ஸ்டோவ் 93 ரன்களில் அவுட்டானார்.

    மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில், இங்கிலாந்து அணி 81 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. அபாரமாக விளையாடிய வோக்ஸ் 120 ரன்களுடனும், சாம் கரன் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
    Next Story
    ×