search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை கால்பந்து - ஜெர்மனி அதிகாரிகள் மீது ஸ்வீடன் பயிற்சியாளர் பாய்ச்சல்
    X

    உலகக்கோப்பை கால்பந்து - ஜெர்மனி அதிகாரிகள் மீது ஸ்வீடன் பயிற்சியாளர் பாய்ச்சல்

    ஜெர்மனி அணியின் வெற்றியை அதிகாரிகள் கொண்டாடிய விதத்திற்கு ஸ்வீடன் பயிற்சியாளர் ஆண்டர்சன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆன ஜெர்மனி ‘எஃப்’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. ஜெர்மனியுடன் இதே பிரிவில் மெக்சிகோ, ஸ்வீடன், கொரியா அணிகள் இடம்பிடித்துள்ளன.

    ஜெர்மனி தனது முதல் ஆட்டத்தில் மெக்சிகோவை எதிர்கொண்டது. இதில் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தி மெக்சிகோ அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் ஜெர்மனி நேற்று ஸ்வீடனை எதிர்கொண்டது.

    முதல் பாதி நேரத்தில் ஸ்வீடன் 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் 48-வது நிமிடத்தில் ஜெர்மனி ஒரு கோல் அடித்தது. இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது. அதன்பின் காயத்திற்கான நேரத்தில் ஆட்டத்தின் 95-வது நிமிடத்தில் ஜெர்மின் மற்றொரு கோல் அடித்து 2-1 என வெற்றி பெற்றது.

    மயிரிழையில் தப்பி வெற்றி பெற்ற ஜெர்மனியின் வெற்றியை, அந்நாட்டு பயிற்சியாளர்கள் குழு உட்பட அதிகாரிகள் ஸ்வீ்டன் பயிற்சியாளரை மோதும் வகையில் வேகமாக ஓடிவந்து கொண்டாடினார்கள். இது ஸ்வீடன் பயிற்சியாளருக்கு எரிச்சலை கொடுத்துள்ளது.



    இதுகுறித்து ஸ்வீ்டன் பயிற்சியார் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘வெற்றியை கொண்டாடிய சில அதிகாரிகள் எங்களை நோக்கி ஓடி வந்தார்கள். அப்போது எங்களது முகங்களை உரசிச் செல்வது போன்று சென்றார்கள். அவர்களின் செய்கை எனக்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. நான் மட்டுமல்ல எங்கள் அணியின் பெரும்பாலானோர் கோபம் அடைந்தனர். நாங்கள் 95 நிமிடங்கள் போராடினோம். அதனால் நான் மிகவும் கோபம் அடைந்தேன்’’ என்றார்.
    Next Story
    ×