search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லீட்ஸ் டெஸ்ட் - பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து
    X

    லீட்ஸ் டெஸ்ட் - பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து

    பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. #ENGvPAK
    லண்டன்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 174 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், விராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி களமிறங்கியது. குக் 46 ரன்கள், ரூட் 45 ரன்கள், டோமினிக் பெஸ் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 363 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோஸ் பட்லர் 80 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    பாகிஸ்தான் அணி சார்பில் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டும், மொகமது அமிர், மொகமது அப்பாஸ், ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.



    இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியினரின் சிறப்பான பந்து  வீச்சினால் அந்த அணி விரைவில் தனது விக்கெட்டுகளை இழந்தது.

    பாகிஸ்தான் அணியில் இமாம் அல் ஹக் 34 ரன்களும், உஸ்மான் சலாவுதின் 33 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றைப்படை இலக்கத்தில் அவுட்டாகினர்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 46 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட், டொமினிக் பெஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஜோஸ் பட்லருக்கும், தொடர் நாயகன் விருது மொகமது அப்பாசுக்கும் வழங்கப்பட்டது. இந்த டெஸ்டில் வென்றது மூலம் டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. #ENGvPAK
    Next Story
    ×