என் மலர்tooltip icon

    செய்திகள்

    காமன்வெல்த் போட்டி- 14 தங்கத்துடன் 36 பதக்கங்கள் பெற்று ஆஸ்திரேலியா முதலிடம்
    X

    காமன்வெல்த் போட்டி- 14 தங்கத்துடன் 36 பதக்கங்கள் பெற்று ஆஸ்திரேலியா முதலிடம்

    காமன்வெல்த் 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 14 தங்கத்துடன் 36 பதக்கங்கள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. #CWG2018 #GC2018
    ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டி நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 4-ந்தேதி) கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று போட்டிகள் தொடங்கியது. தொடக்க நாளில் இங்கிலாந்து 6 தங்கம், தலா மூன்று வெள்ளி, வெண்கலத்துடன் 12 பதக்கங்கள் வென்று முதல் இடத்தை பிடித்தது.

    போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா 5 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 15 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தை பிடித்திருந்தது. மலேசியா 2 தங்கங்களுடன் 3-வது இடத்தையும், இந்தியா தலா ஒரு தங்கம், வெள்ளியுடன் 7-வது இடத்தையும் பிடித்திருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா தங்கள் உள்பட அனைத்து பதக்கங்களுக்கான போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. இன்றைய 2-வது நாளில் மட்டும் 21 பதக்கங்களை பெற்றுள்ளது.

    14 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலத்துடன் 36 பதக்கங்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 9 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 18 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இந்தியா 2 தங்கம், தலா ஒரு வெள்ளி, வெண்கலத்துடன் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
    Next Story
    ×