என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேன் வில்லியம்சனின் சதம் வீண்- 4 ரன்னில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
    X

    கேன் வில்லியம்சனின் சதம் வீண்- 4 ரன்னில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் கேன் வில்லியம்சன் கடைசி வரை நின்றும், நியூசிலாந்து பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. #NZvENG
    நியூசிலாந்து - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-வது போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மோர்கன் (48), பென் ஸ்டோக்ஸ் (39), பட்லர் (29), மொயீன் அலி (23) ஆகியோரின் ஆட்டத்தால் 50 ஓவரில் 234 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்டிங்கை தொடங்கியது. மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மார்ட்டின் கப்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து முன்றோ உடன் கேப்டன் கேன் வில்லிம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கொலின் முன்றோ  62 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது ஜோடிக்கு இருவரும் இணைந்து 80 ரன்கள் எடுத்தனர்.



    அதன்பின் வந்த சாப்மேன் (8), டாம் லாதம் (0), நிக்கோல்ஸ் (0), கிராண்ட்ஹோம் (3) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. 7-வது விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் உடன் சான்ட்னெர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதேவேளையில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசி அதிரடி ஆட்டத்திற்கு தடைபோட்டனர். சான்ட்னெர் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் விளையாடிய கேன் வில்லியம்சன் 133 பந்துகளை சந்தித்து சதம் அடித்தார். சான்ட்னெர் அவுட்டாகும்போது நியூசிலாந்து 45.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி 28 பந்தில் 36 ரன்கள் தேவைப்பட்டது. கேன் வில்லியம்சன் களத்தில் இருந்தார். டாம் குர்ரான் மற்றும் வோக்ஸ் ஆகியோரின் நேர்த்தியான பந்து வீச்சால் நியூசிலாந்து அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 4 ரன்கள் வித்தியாச்தில் வெற்றி பெற்றது.



    கேன் வில்லியம்சன் 143 பந்தில் 112 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னணி பேட்ஸ்மேன் சதம் அடித்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த நிலையிலும் தோல்வியடைந்தது நியூசிலாந்துக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
    Next Story
    ×