search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக விரும்பும் கிறிஸ் லின்
    X

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக விரும்பும் கிறிஸ் லின்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டால் ஏற்றுக் கொள்வேன் என்று கிறிஸ் லின் ஆர்வம் தெரிவித்துள்ளார். #IPL2018 #KKR
    ஐபிஎல் சீசன் 2018-க்கான வீரர்கள் ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது. ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் டோனியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக வார்னரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித்தும், மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும் பணியாற்ற இருப்பது உறுதியாகியுள்ளது.

    ஆனால் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு யார் யார் கேப்டனாக பணியாற்ற போகிறார்கள் என்பது குறுித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் அந்த அணிகள் வெளியிடப்படவில்லை.

    கொல்கத்தா அணியில் 1. பியூஸ் சாவ்லா, 2. கேமரூன் டெல்போர்ட், 3. இஷாங்க் ஜக்கி, 4. மிட்செல் ஜான்சன், 5. தினேஷ் கார்த்திக், 6. குல்தீப் யாதவ், 7. கிறிஸ் லின், 8. கம்லேஷ் நகர்கோட்டி, 9. சுனில் நரைன், 10. நிதிஷ் ராணா, 11. அன்ட்ரே ரஸல், 12. ஜவோன் சீர்லெஸ், 13. ஷிவம் மவி, 14. ஷுப்மான் கில், 15. ரிங்கு சிங், 16. மிட்செல் ஸ்டார்க், 17. ராபின் உத்தப்பா, 18. வினய் குமார், 19. அப்போர்வ் வான்கடே இடம்பிடித்துள்ளனர்.

    இதில் தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, கிறிஸ் லின் ஆகியோர் கேப்டன் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளனர். தினேஷ் கார்த்திக்கு கேப்டன் பதவியில் அனுபவம் உள்ளது. அதேவேளையில் அதிரடி பேட்ஸ்மேன் ஆன கிறிஸ் லின்னும் போட்டியில் உள்ளார்.

    கொல்கத்தா அணியின் கேப்டனுக்கான தேர்வில் கிறிஸ் லின் உள்ளார் என்று ஆலோசகரான கல்லீஸ் கூறியுள்ளார்.



    இந்நிலையில் கேப்டன் பதவி வந்தால் ஏற்றுக் கொள்வேன் என்று கிறிஸ் லின் கூறியுள்ளார். இதுகுறித்து கிறிஸ் லின் கூறுகையில் ‘‘கேப்டன் பதவியை நான் கட்டாயம் விரும்புவேன். அந்த வாய்ப்பிற்காக போட்டி போடுவேன். கொல்கத்தா அணி சிறந்த குரூப்பை பெற்றுள்ளது.

    பயிற்சியாளர்கள் காடிச், கல்லீஸ், ஹீத் ஸ்டிரீக் ஆகியோருடன் என்னால் சிறந்த முறையில் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். கேப்டன் அனுபவத்தை வளர்த்துக் கொண்டு வரும் நிலையில், கேப்டன் பதவி வந்தால் அதில் இருந்து எக்காரணம் கொண்டும் பின் வாங்க மாட்டேன்’’ என்றார்.

    கொல்கத்தா அணியால் 9.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட கிறிஸ் லின்னுக்கு இது ஐந்தாவது ஐபிஎல் சீசனாகும். கடந்த சீசனில் 7 போட்டிகளில் 295 ரன்கள் குவித்தார். ஸ்ட்ரைக் ரேட் 180.98 ஆகும்.
    Next Story
    ×