என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிக விக்கெட்: வாசிம் அக்ரமை பின்னுக்குத் தள்ளினார் ஹெராத்
    X

    அதிக விக்கெட்: வாசிம் அக்ரமை பின்னுக்குத் தள்ளினார் ஹெராத்

    வங்காள தேசத்திற்கு எதிரான டாக்கா டெஸ்டில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியன் மூலம் வாசிம் அக்ரம் சாதனையை முறியடித்தார் ஹெராத். #BANvSL
    வங்காள தேசம் - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் நடைபெற்றது. இதில் 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காள தேசம் 123 ரன்னில் சுருண்டது. இதனால் இலங்கை அணி 215 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.

    முதல் இன்னிங்சில் விக்கெட் ஏதும் வீழ்த்தாத ஹெராத், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். கடைசி விக்கெட்டாக தைஜூல் இஸ்லாமை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 415 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    அத்துடன் 414 விக்கெட்டுக்கள் மூலம் டெஸ்டில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தி 12-வது இடத்தில் இருந்து வாசிம் அக்ரமை பின்னுக்குத் தள்ளி 12-வது இடத்திற்கு முன்னேறினார்.



    மேலும் இடது கை பந்து வீச்சாளர்களில் வாசிம் அக்ரம்தான் முதல் இடத்தில் இருந்து வந்தார். தற்போது அவரை பின்னுக்குத் தள்ளி ஹெராத் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    முத்தையா முரளீதரன் 800 விக்கெட்டுக்கள் உடன் முதல் இடத்திலும், வார்னே (708), கும்ப்ளே (619), மெக்ராத் (563), ஆண்டர்சன் (523), வால்ஷ் (519), கபில்தேவ் (434), ஹேட்லி (431), பொல்லாக் (421), ஸ்டேயின் (419), ஹர்பஜன் சிங் (417) ஆகியோர் முறையே 2-வதும் இடம் முதல் 11-வது இடம் வரை பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் வலது கை பந்து வீச்சாளர்கள் ஆவார்கள்.  #BANvSL #Herath #WasimAkram
    Next Story
    ×