என் மலர்
- கவிஞர் வைரமுத்துக்கு இந்த ஆண்டு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டது.
- 24 ஆண்டுக்கு பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
சென்னை:
இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது இந்தாண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1975ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002ல் ஜெயகாந்தனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைக்கிறது.
ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட பின் வைரமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஞானபீடம் விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரஜினிகாந்த் கூறுகையில், நம் இந்திய நாட்டின் பெரும் மதிப்புமிக்க ஞான பீட விருதைப் பெற்றிருக்கும் என் அருமை நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் ரசிகர்களிடம் கல்ட் காமெடி திரைப்படமாக தனி இடத்தை பெற்ற 'Aadu'. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியான Aadu 2 திரைப்படமும் வெற்றி பெற்றது. தற்போது அந்த சீரிஸின் மூன்றாவது பாகமான Aadu 3 உருவாகியுள்ளது.
இந்த படத் தொடரின் மையக் கதாபாத்திரமான ஷாஜி பாப்பன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஜெயசூரியா மீண்டும் நடித்துள்ளார். அவரின் வித்தியாசமான காமெடி நடிப்பு, உடல் மொழி மற்றும் டயலாக் டெலிவரி காரணமாக இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
2015-ல் வெளியான முதல் பாகம் துவக்கத்தில் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் பின்னர் டிவி மற்றும் இணைய தளங்களில் கல்ட் ஹிட்டாக மாறியது. அதனால் 2017-ல் வெளியான Aadu 2 மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை மிதுன் மானுவல் தாமஸ் தான் இயக்கியுள்ளார்.
இப்படம் வருகிற 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிளான சுல்தான் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. வேதிகாவின் நடனத்தில் உருவாகியுள்ள இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஒரு புறம் ஆந்திர துணை முதல்வராக இருந்துகொண்டு மறுபுறம் படங்களிலும் நடித்து வருகிறார். இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் 'உஸ்தாத் பகத் சிங்' என்ற படத்தில் பவன் நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில், பவன் கல்யாணுக்கு ஜோடியாக அவரை விட 30 வயது இளையவரான ஸ்ரீலீலா நடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், `உஸ்தாத் பகத் சிங்' திரைப்படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நடிகர் பார்த்திபன், ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனிக்கு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் 'பிச்சைக்காரன்'. இயக்குநர் சசி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.
'பிச்சைக்காரன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் இயக்குநர் சசியுடன் மீண்டும் இணையவில்லை. இவர்களின் கூட்டணி மீண்டும் இணையுமா? என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில், இயக்குநர் சசியுடன் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளார். இருவரும் இணைந்துள்ள இப்படத்திற்கு 'நூறு சாமி' என தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் ஆண்டனி நிறுவனம் தயாரிப்பில் இப்படம் அடுத்தாண்டு மே மாதம் 1-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், நூறு சாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 16 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் `தேரே இஷ்க் மே'. இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. தற்போது, தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். `கர' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், வெளியீட்டிற்கான பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கர படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான வா ஏய் கரசாமி பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
- இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது இந்தாண்டு கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1975ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002ல் ஜெயகாந்தனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைக்கிறது.
ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து வைரமுத்துக்கு நடிகரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நெடிய பரம்பரை கொண்ட தமிழிலக்கியத்துக்கு மூன்றாவது முறையாக உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் பெற்ற முந்தைய ஞானபீடத்துக்குப் பிறகு, கால் நூற்றாண்டு கடந்து தமிழுக்கு இந்தப் பெரும்பெருமையைச் சேர்த்திருக்கிறார் என் ஆப்தர் கவிப்பேரரசு வைரமுத்து.
'வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்' என்கிற கவிச் சொற்களோடு என் செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பில் கலந்த நண்பரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படமாக உருவாகி வரும் 'விஸ்வநாத் அன்ட் சன்ஸ்' படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் மமிதா பைஜூ, ரவீனா டான்டன், பவானி ஸ்ரீ, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் நாக வம்சி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை நிமிஷ் ரவி மேற்கொள்ள நவீன் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.
2005ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தின் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரம் போன்றே "விஸ்வநாத் அன்ட் சன்ஸ்" படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் இருக்கும் என்று இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்து இருக்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஜூலை மாதம் இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் டீஸர் மார்ச் 16ம் தேதி மாலை 4.06 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் "சேயோன்" படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 'சேயோன்' திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சேயோன் திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
இலக்கியத் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்குவோருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது இந்தாண்டு கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1975ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002ல் ஜெயகாந்தனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைக்கிறது.
ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட பின்பு வைரமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- டிசி படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக வாமிகா கபி நடிக்கிறார்.
முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி, தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம்வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் டிசி படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படம் முழு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக முன்னணி பாலிவுட் நடிகையான வாமிகா கபி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சனா நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்திரன் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
மதுரையில் அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலம் மிக்கவராகவும், பிரபல ரவுடியாகவும் இருக்கிறார் 'பருத்திவீரன்' சரவணன்.
இவரது மகன் கஞ்சா கடத்தியதாக காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார். விசாரணை என்ற பெயரில 4 போலீஸ்காரர்கள் சேர்ந்து சரவணனின் மகளை கடுமையாக தாக்குகிறார்கள். பின்னர் தான் அவர் யாருடைய மகன் என்பது போலீஸ்காரர்களுக்கு தெரிய வருகிறது.
இதனால், அவரை யாருக்கும் தெரியாமல் தூக்கிக்கொண்டு போய் காட்டுக்குள் விட்டுவிடுகின்றனர். ஆனால், அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடப்பதை அறிந்து போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். தனது மகன் கொலை செய்யப்படுவதற்கு முன்பு காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட உண்மையும் அவரது தந்தைக்கு தெரிந்து விடுகிறது.
இதனால், தன் மகனை கொலை செய்த காவலர்களை பழிவாங்க துடிக்கும் சரவணன், சம்மந்தப்பட்ட காவலர்களின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய தொடங்குகிறார்.
மறுபக்கம், உண்மையான கொலை குற்றவாளியையும், கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடித்து, காவலர்கள் மீதான சரவணின் பழி வாங்கும் நடவடிக்கைகளை தடுக்க முயற்சிக்கிறது.
இறுதியில் சரவணனின் மகனை கொலை செய்தது யார் ?, பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
மகன் மீது பேரன்பு கொண்ட கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் சரவணன். ஆக்ரோஷமான கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் சரவணன். காமெடி இல்லாமல் குணச்சித்திர நடிப்பை வழங்கியுள்ளார் 'காதல்' சுகுமார். ஏ.எம்.ராஜா மலைச்சாமி, சுரேகா.ஆர், நிஷா துபே, ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா ஆகியோர் கேரக்டருக்கேற்ப கச்சிதமாக நடித்துள்ளனர்.
இயக்கம்
லாக்கப் டெத் கதைக்களத்தில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக இயக்கியுள்ளார் இயக்குனர் பாலு.எம்.
ஒளிப்பதிவு
ஜெயகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
இசை
சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு ஏற்ற பின்னணி இசையை வழங்கியுள்ளார் ஜெயா கே.தாஸ்.
ரேட்டிங்-1.5/5
- விழாவில் நீனா குப்தாவும் அவரது கணவரும் ஜோடியாக நின்றபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
- 66 வயது நிரம்பிய நீனா குப்தா கர்ப்ப செய்தி காட்டு தீ போல ஊரெங்கும் பரவியது.
பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையான நீனா குப்தா கணவருடன் ஐதராபாத்தில் நடந்த ராஷ்மிகா -விஜய் தேவரகொண்டா திருமண விழாவில் பங்கேற்றார்.
விழாவில் நீனா குப்தாவும் அவரது கணவரும் ஜோடியாக நின்றபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. படத்தில் நீனா குப்தா வயிற்றை பார்த்த பலர் நீனா கர்ப்பமாக இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்ப தொடங்கினர்.
66 வயது நிரம்பிய நீனா குப்தா கர்ப்ப செய்தி காட்டு தீ போல ஊரெங்கும் பரவியது. இதற்கு பதில் அளித்த நீனா குப்தா அப்படி எதுவும் இல்லை.
திருமண விழாவில் நான் அணிந்திருந்த சேலையின் துணி கொஞ்சம் தடிமனாக இருந்தது. அதனால் நான் குண்டாக தெரிந்தேன். ஆனால் ஒன்னு... இந்த வயதில் மக்கள் என் கர்ப்பத்தை பற்றி இவ்வளவு அதிகமாக விவாதிப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.








