என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • தயாரிப்பாளர் சிவா மகளின் திருமண ரிசப்ஷன் நேற்று இரவு நடைபெற்றது.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழக வெற்றிக்கழக தலைவரான நடிகர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார்.

    கடந்த செப்டம்பர் மாதம் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் நாகப்பட்டினம், திருவாரூர், கரூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார்.

    அப்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. த.வெ.க. சார்பில் உள் அரங்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மட்டுமே விஜய் பங்கேற்றார்.

    காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட உள்ளரங்க கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் விஜய் பேசினார்.

    இந்நிலையில், தயாரிப்பாளர் சிவா மகளின் திருமண ரிசப்ஷனில் விஜய் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி நடித்துள்ளனர்.
    • 27ம் தேதி மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்டது.

    விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.

    அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்டது.

    பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இதன்முன் விஜயை வைத்து படம் இயக்கிய இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோரும் கலந்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எனவே விழாவில் விஜய் ஒருபுறம் குட்டி கதை சொல்ல தனுஷ் மறுபுறம் ரஜினி ஸ்டைலில் பேச வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிரார்ப்பிக்கின்றனர். 

    மறுபுறம் சுதா கோங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.  

    • 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது.
    • தொடர் முழுவதும் சிலியன் மர்ஃபி, டாமி ஷெல்பி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார்.

    உலகெங்கிலும் கேங்ஸ்டர் கதைக்கு என்று என்றுமே தனி மவுசு உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேங்ஸ்டர் கதை பீக்கி 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders). இணைய தொடராக வெளிவந்து வரவேற்பை பெற்ற இதன் 6வது சீசன் 2022 இல் வெளியானது. அடுத்ததாக 2 புதிய சீசன்களுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது.

    இந்த க்ரைம் டிராமா தொடர், 1880கள் முதல் 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது. தொடர் முழுவதும் சிலியன் மர்ஃபி (Cillian Murphy) டாமி ஷெல்பி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார். கடந்த 2023 வெளியான கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹைமர் படத்திற்காக சிலியன் மர்ஃபி ஆஸ்கர் விருது வாங்கியது அவரது நடிப்புத்திறனுக்கு சான்று.

    இதற்கிடையே பீக்கி பிளைண்டர்ஸ் தொடரை படமாக தயாரிப்பதாக நெட்பிளிக்ஸ் அறிவித்தது. படத்திலும் சிலியன் மர்ஃபி -யே டாமி ஷெல்பியாக நடிக்கிறார். முதலாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டனில் நடைபெறும் வரலாற்று கதைகளத்துடன் இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது

    இந்நிலையில் இந்த படத்திற்கு "தி இம்மோர்டல் மேன்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் "தி இம்மோர்டல் மேன்" திரைப்படம் மார்ச் 20 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  

     

    • ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார்.
    • தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய 7 மொழிகளில் வெளியாக உள்ளது.

    நிவின் பாலி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். மேலும் நயன் தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

    அதை தொடர்ந்து நிவின் பாலி Baby Girl படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நடிப்பில் சர்வம் மாயா என்ற படம் கிறிஸ்துமஸ்க்கு வெளியாக உள்ளது.

    இதற்கிடையில் பி.ஆர். அருண் எழுதி இயக்கியுள்ள 'பார்மா' என்ற வெப் தொடரில் நிவின் பாலி நடித்திருந்தார் .

    இந்த படம் வரும் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய 7 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த தொடரின் டிரெய்லர் தற்போது படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

    ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. 75வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அவரது இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ஏற்கனவே, ரஜினியின் பிறந்தநாள் அன்று படையப்பா ரீ ரிலீஸ் செய்யப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    அதன்படி, ரஜினியின் பிறந்தநாளான வரும் 12ம் தேதி அன்று சூப்பர் ஹிட் திரைப்படமான படையப்பா 4K தரத்தில் வெளியாக இருப்பதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    அதுமட்டுமல்ல.. நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாகவும் படையப்பா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனால், படையப்பாவின் ரீ ரிலீஸ்க்காக ரசிகர்கள்கள் ஆவலுடன் உள்ளனர்.

    மலேசியாவில் 24H சீரிஸ் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள அஜித்குமார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.

    அவ்வகையில் மலேசியாவில் நடைபெறும் 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.

    இதற்கிடையே, அரசன் படத்தில் பயங்கர பிசியாக நடித்து வரும் சிம்பு நகை கடை திறப்பு விழாவிற்காக இன்று மலேசியா சென்றுருந்தார்.

    அந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட கையோடு, ஒரு தல ரசிகனாக அஜித்தை பார்க்க சென்றுவிட்டார்.

    அதுவும் எப்படி தெரியுமா..? அஜித்தின் ரேஸிங் அணியின் ஜெர்சியை அணிந்து அவரை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்தார் சிம்பு. இவர்களின் சந்திப்பினால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

    இதுதொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மரியா ராஜா.

    இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

    இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

    மேலும் இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், 'ஹாப்பி ராஜ்' படத்தின் First Look போஸ்டர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    மழை காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது.

    ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள படம் 'லாக்டவுன்'. கொரோனா ஊரடங்கின்போது நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு என்ஆர் ரகுநந்தன், சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் நேற்று வெளியாக இருந்தது. ஆனால், மழை காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது.

    ரசிகர்கள், பார்வையாளர்கள், திரையரங்க ஊழியர்களின் நலனை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், விரைவில் படம் வெளியாகும் எனவும் தெரிவித்தனர்.

    இந்நிலையில், லாக்டவுன் படம் வெளியாகும் புதிய தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, லாக்டவுன் படம் வரும் 12ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என லைகா நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    இதேநாளில், கார்த்தி நடிப்பில் நேற்று வெளியாக இருந்த வா வாத்தியார் படமும் வரும் 12ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார்.
    • மரியா ராஜா இளஞ்செழியன் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

    இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

    இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

    மேலும் இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 




    • சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    • நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    கார்த்தியின் 26-வது படம் இதுவாகும். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    'வா வாத்தியார்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் நேற்று வெளியாகவில்லை.


    இந்த நிலையில், 'வா வாத்தியார்' திரைப்படம் வருகிற 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்து உள்ளது. மேலும் படத்தின் டிரெய்லரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தீவிர எம்ஜிஆர் ரசிகரும், போலீஸ் அதிகாரியுமான கார்த்தி எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டு 'வா வாத்தியார்' எடுக்கப்பட்டுள்ளது. 



    • அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர் சிறுத்தை சிவா.
    • அஜித் குமாருடன் சிறுத்தை சிவா கடந்த சில நாட்களாக நேரம் செலவிட்டு வருகிறார்.

    நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர் சிறுத்தை சிவா. விவேகம் படம் மட்டும் சொதப்பியது.

    தொடர்ந்து சூர்யாவை வைத்து சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படமும் பிளாப் ஆனது. இதன்பின் புதிய படங்களை இயக்காமல் இருந்த சிவா பொதுவெளியில் அதிகம் காணப்படவில்லை.

    இந்நிலையில் மலேசியாவில் கார் பந்தயத்திற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வரும் அஜித் குமாருடன் சிறுத்தை சிவா கடந்த சில நாட்களாக நேரம் செலவிட்டு வருகிறார். அங்கு அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவுடன் சிறுத்தை சிவா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் சிறுத்தை சிவா அஜித்துக்கு கதை சொல்ல அங்கு சென்றுள்ளதாகவும், இருவரின் கூட்டணியில் புதிய படம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் ஊகங்கள் எழுந்துள்ளது.

    அஜித்தின் ரேஸிங் வாழ்க்கை பற்றி ஆவணப்படம் ஒன்று உருவாக இருப்பதாக தகவல்கல் வெளியாகி வந்த நிலையில் அந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    குட் பேட் அக்லி வெற்றிக்கு பிறகு அஜித் அடுத்ததாக மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
    • வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஹாரி பாட்டர் திரைப்படங்கள், டிசி காமிக்ஸ் திரைப்படங்கள், கேம் ஆஃப் த்ரோன்ஸ் பல வெப் சீரிஸ்கள் ஆகியவை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாகியுள்ளது.

    உலகளவில் முன்னணி ஓடிடி தளமாக நெட்பிளிக்ஸ் திகழ்ந்து வருகிறது.

    இந்நிலையில் நெட்பிளிக்ஸ், பிரபல ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை ரூ.7.44 லட்சம் கோடிக்கு நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. 

    இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஸ்டூடியோக்கள், அவர்கள் தயாரித்த பிரபல திரைப்படங்கள், HBO MAX ஓடிடி தளம் ஆகியவற்றை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஹாரி பாட்டர் திரைப்படங்கள், டிசி காமிக்ஸ் திரைப்படங்கள், கேம் ஆஃப் த்ரோன்ஸ் பல வெப் சீரிஸ்கள் ஆகியவை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாகியுள்ளது. இதனால் இவை இனி நெட்பிளிக்ஸ் தளத்தில் கணக்கிடைக்க உள்ளது.

    முன்னதாக, வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் விற்பனைக்கு வருவதாக அறிவிப்பு வெளியான நிலையில் பல நிறுவனங்கள் வாங்க போட்டியிட்ட நிலையில் நெட்பிளிக்ஸ் வெற்றிகரமாக நிறுவனத்தை கைப்பற்றி உள்ளது. 

    ×