search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    கூகுள் பிளே ஸ்டோர்
    X
    கூகுள் பிளே ஸ்டோர்

    வேலியே பயிரை மேயும் ஆபத்து: பயனர்களின் தகவல்களை திருடும் ஆன்டி வைரஸ் செயலிகள்!

    பிற தளங்களில் இருந்து ஏபிகே ஃபைல்களை டவுன்லோட் செய்வது ஆபத்தை ஏற்படுத்தும் என கூகுள் எச்சரித்து வரும் நிலையில் கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலேயே தொடர்ந்து பாதிக்கப்பட்ட செயலிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
    ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு செயலிகள், கேம்களை தரவிறக்கம் செய்வதற்கு அதிக அளவில் கூகுள் பிளே ஸ்டோர் பயன்பட்டு வருகிறது. கூகுளின் அதிகாரப்பூர்வ தளம் என்பதால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் மட்டுமே இதில் இடம்பெறுகின்றன.

    ஆனால் சமீபத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகள் தொடர்ந்து மால்வேர், வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது பிளே ஸ்டோரில் 6 புதிய செயலிகளில் பயனர்களின் லாகிங் தகவல்களை திருடும் மால்வேர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

    இதில் முக்கியமான அம்சம் இந்த செயலிகள் எல்லாம் வைரஸ்களை நீக்குவதாக கூறும் ஆண்டி வைரஸ் செயலிகள் என்பது தான்.

    Atom Clean booster antivirus, Antivirus super cleaner, Alpha antivirus cleaner, Powerful Cleaner, antivirus, Center Security Antivirus ஆகிய செயலிகள் மால்வேர்களை கொண்டுள்ளது.

    இந்த செயலிகளை கூகுள் கண்டறிந்து நீக்குவதற்கு முன் 15,000க்கும் மேற்பட்டோர் டவுன்லோட் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

    இந்த ஆண்டி வைரஸ் செயலிகளில் ஷார்க்பாட்ஸ் என்ற மால்வேர் இடம்பெற்றுள்ளது. இது பயனர்களின் நம்முடைய யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகிய தகவல்களை திருடும் வல்லமை கொண்டது. அதேபோல நாம் டைப் செய்யும் ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து. நாம் வங்கி தொடர்பாக டைப் செய்துள்ள தகவல்களை எடுத்துகொள்ளக்கூடியது.

    இந்த மால்வேரால் பிரிட்டன் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிற தளங்களில் இருந்து ஏபிகே ஃபைல்களை டவுன்லோட் செய்வது ஆபத்தை ஏற்படுத்தும் என கூகுள் எச்சரித்து வரும் நிலையில் கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலேயே தொடர்ந்து பாதிக்கப்பட்ட செயலிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
    Next Story
    ×