என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரூ.1499 விலையில் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம் செய்த சியோமி
    X

    ரூ.1499 விலையில் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம் செய்த சியோமி

    சியோமி நிறுவனத்தின் புதிய ப்ளூடூத் ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட்ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. #Xiaomi #BluetoothEarphone



    சியோமி நிறுவனம் Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ப்ளூடூத் இயர்போன் Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் பேசிக் என அழைக்கப்படுகிறது.

    இதில் ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட்ப்ரூஃப் வடிவமைப்பு மற்றும் IPX4 தரச்சான்று பெற்றிருக்கிறது. இந்த இயர்போனில் மேம்பட்ட பேஸ் ரெஸ்பான்ஸ் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.



    சியோமி Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் அம்சங்கள்:

    - ப்ளூடூத் 4.1
    - 360 டிகிரி கோணத்தில் சுழற்றக்கூடிய ஹூக் வடிவமைப்பு
    - பில்ட்-இன் MEMS மைக்ரோபோன் வசதி
    - மூன்று பட்டன்கள் கொண்ட வடிவமைப்பு
    - 58° மைக்ரோ-டைட்டிள்டு ஸ்போர்ட்ஸ் வடிவமைப்பு
    - ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட்ப்ரூஃப்
    - 5 வித இயர் டிப்கள்
    - 120 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி Mi ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் பேசிக் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×