search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    90 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை
    X

    90 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை

    வோடபோன் நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகையில் பயனர்களுக்கு 90 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #Vodafone



    வோடபோன் நிறுவன பிரீபெபெயிட் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளையும், பழைய சலுகைகளை மாற்றியமைப்பதை பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் சமீப காலங்களில் அடிக்கடி செய்து வருகின்றன. எனினும், போஸ்ட்பெயிட் சலுகை சார்ந்த அறிவிப்புகள் வெளியாகி சிலகாலம் ஆகிவிட்டது என்றே கூறலாம்.

    இந்த கவலையை போக்கும் விதமாக வோடபோன் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. வோடபோன் அறிவித்திருக்கும் புதிய புதிய போஸ்ட்பெயிட் சலுகையில் பயனர்களுக்கு ரூ.11,498 மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் மாதம் ரூ.649 கட்டணத்தில் ரெட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பலன்களை பொருத்தவரை எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் அன்லிமிட்டெட் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டேட்டா பலன்களை பொருத்தவரை திட்டத்தில் மாதம் 90 ஜி.பி. டேட்டா, மற்றும் 200 ஜி.பி. வரை டேட்டா ரோல்ஓவர் சலுகையும் வழங்கப்படுகிறது.



    இத்துடன் 12 மாதங்களுக்கான வோடபோன் பிளே சந்தாவும் இச்சலுகையில் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் நேரலை டி.வி. மற்றும் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்க முடியும். இத்துடன் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தாவும் வழங்கப்படுகிறது. 

    இவைதவிர புதிய சலுகையை தேர்வு செய்வோர் ஐபோன் ஃபார்எவர் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.649 மற்றும் அதற்கும் அதிக கட்டணம் கொண்ட போஸ்ட்பெயிட் திட்டங்களுக்கு இச்சலுகை வழங்கப்படுகிறது. இதில் ஐபோனை தவறுதலாக கீழே போடும் போது ஏற்படும் சேதத்தை சரி செய்து கொள்ளலாம். 

    இச்சலுகையில் அதிகபட்சம் ரூ.15,000 வரையிலான தொகைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் ஐபோன் ஃபார்எவர் சலுகையில் ஐபோனினை சரி செய்யவோ அல்லது மாற்றிக் கொள்ளவோ ரூ.2000 மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. வரியை செலுத்த வேண்டியிருக்கும். 

    இத்துடன் பழைய ஐபோன்களை கொடுத்து புதிய ஐபோனினை வாங்கிக்கொள்ளும் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஐபோன் 5எஸ் மற்றும் அதற்கும் பழைய ஐபோன்களை கொடுத்து வாடிக்கையாளர்கள் புதிய ஐபோனினை பெற்றுக் கொள்ளலாம். இதில் பயனர்கள் தங்களது ஐபோனினை அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடம் வாங்கியிருப்பதோடு ஐபோன் 18 மாதங்களுக்குள் வாங்கியதாக இருக்க வேண்டும்.
    Next Story
    ×