search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அறிமுக சலுகைகளுடன் ஒப்போ ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை துவங்கியது
    X

    அறிமுக சலுகைகளுடன் ஒப்போ ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை துவங்கியது

    ஒப்போ நிறுவனம் முன்னதாக இந்தியாவில் அறிமுகம் செய்த ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் அசத்தல் சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. #oppor17 #smartphone



    இந்தியாவில் ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஆர்17 மாடலில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, நாட்ச், 91.5% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு, 10 என்.எம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர் , இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 25 எம்.பி. ஏ.ஐ. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிரேடியன்ட் கிளாஸ் பேக், மெட்டல் ஃபிரேம் மற்றும் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. 



    ஒப்போ ஆர்17 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - ஆக்டா-கோர் ஸ்ன்ப்டிராகன் 670 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 615 GPU
    - 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 5 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார், 3D போர்டிரெயிட்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - VOOC ஃபிளாஷ் சார்ஜ்

    ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் ட்விலைட் புளு, ஸ்டேரி பர்ப்பிள் நிறங்களில், கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் விலை ரூ.34,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.4900 மதிப்புள்ள 3200 ஜி.பி. அதிவேக 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ஒருமுறை ஸ்கிரீன் சரி செய்து கொள்ளும் வசதி, பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ.5000 தள்ளுபடி மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. #OppoR17  #smartphone
    Next Story
    ×