search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஃபேஸ்புக்கில் இனி இப்படியும் போஸ்ட் செய்யலாம்
    X

    ஃபேஸ்புக்கில் இனி இப்படியும் போஸ்ட் செய்யலாம்

    ஃபேஸ்புக் தளத்தின் நியூஸ் ஃபீடில் வழக்கமான புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் புதுவிதமாக போஸ்ட் பதிவிட வழி செய்துள்ளது. #Facebook #SocialMedia



    ஃபேஸ்புக் நிறுவனத்தின் நியூஸ் ஃபீட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் 3டி படங்களை உருவாக்க முடியும்.

    பயனர்கள் பல்வேறு லேயர்களை உருவாக்கி, அவற்றை மாற்றியமைத்து சோதனை செய்யும் வசதியும், நிறம் மற்றும் டெக்ஸ்ச்சர்களை மாற்றியமைத்து சிறப்பான 3டி அனுபவத்தை பெருமளவு உருவாக்கி கொள்ளலாம்.

    நியூஸ் ஃபீட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் அனைவரும் 3டி படங்களை பார்க்க முடியும். எனினும் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதி இன்று முதல் வழங்கப்படுவதாக ஃபேஸ்புக் 360 தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 3டி படங்களுக்கான தொழில்நுட்பம் பொருள், இடத்தின் முன்பகுதி மற்றும் பின்னணி இடைவெளியை கணக்கிடும்.



    புகைப்படத்தை போர்டிரெயிட் மோடில் எடுத்து, அதனை 3டி போட்டோவாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள முடியும். இனி படத்தை ஸ்கிரால், பேன் அல்லது டில்ட் செய்து படத்தை உண்மையான 3டி-யில் பார்க்க முடியும். ஆகுலஸ் கோ பிரவுசர் அல்லது ஃபயர்பாக்ஸ்-இல் ஆகுலஸ் ரிஃப்ட் உள்ளிட்டவற்றில் 3டி புகைப்படங்களை பார்க்கலாம். 

    இந்த அம்சம் வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் குறித்த கருத்துக்களை பயனரிடம் கேட்டறிந்து வருகிறோம், தொடர்ந்து இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கி வருகிறோம் என ஃபேஸ்புக் 360 பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்த அம்சம் மே மாதம் நடைபெற்ற எஃப்8 நிகழ்வில் ஃபேஸ்புக் அறிமுகம் செய்தது.
    Next Story
    ×