என் மலர்

  தொழில்நுட்பம்

  இணையத்தில் லீக் ஆன 10 ஜி.பி. ரேம் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன்
  X

  இணையத்தில் லீக் ஆன 10 ஜி.பி. ரேம் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஒப்போ ஸ்மார்ட்போனில் 10 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. #OPPOFindX
   


  ஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பாப்-அப் கேமரா மாட்யூல் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகமான ஃபைன்ட் X மாடலில் 93.8% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ வழங்கப்பட்டு இருந்தது.

  இத்துடன் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டது. அறிமுக நிகழ்வின் போதே ஃபைன்ட் X மாடலில் 10 ஜி.பி. ரேம் வேரியன்ட் அறிமுகம் செய்யப்படும் என ஒப்போ அறிவித்து இருந்தது. இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் வெர்ஷன் TENAA வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது.

  வெய்போவில் லீக் ஆகியிருக்கும் விவரங்களில் ஃபைன்ட் X மாடலில் 10 ஜி.பி. ரேம் வேரியன்ட் உருவாக்கப்படுவது உறுதியானது. இத்தகைய ரேம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையையும் ஃபைன்ட் X பெற இருக்கிறது. எனினும் இந்த வேரியன்ட் அறிமுகமாகும் வரை மற்ற நிறுவனம் 10 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யாமல் இருக்க வேண்டும்.  சில மாதங்களுக்கு முன் வெளியான விவரங்களில் விவோ நிறுவனம் X சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாகவும், இதில் அந்நிறுவனம் அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம் வழங்க இருப்பதாக தகவல் வெளியானது. மேம்படுத்தப்பட்ட ஃபைன்ட் X மாடலின் அறிமுகம் குறித்து ஒப்போ இதுவரை எவ்வித தகவலையும் வழங்கவில்லை.

  ரேம் தவிர புதிய வேரியன்ட்டில் அதிகப்படியான மாற்றங்கள் இருக்காது என்றே தெரிகிறது. ஃபைன்ட் X ஸ்மார்ட்போனில் 6.42 இன்ச் AMOLED , 2340x1080 பிக்சல் ரெசல்யூஷன், 19:5:9 ரக டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று ஃபைன்ட் X மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 10 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. இதன் மெமரி முந்தைய வேரியன்ட் போன்று 256 ஜி.பி. வரை வழங்கப்படலாம்.

  பாப்-அப் கேமரா மாட்யூலின் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா: 16 எம்.பி. + 20 எம்.பி. யூனிட் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசதி, 3730 எம்.ஏ.ஹெச். பேட்டரி, கலர் ஓ.எஸ். 5.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
  Next Story
  ×