என் மலர்
தொழில்நுட்பம்

இருபது வருடங்களில் முதல் முறை - மன்னிப்பு கேட்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஆன்லைன் சேவையில் வாடிக்கையாளர்கள் தகவல் திருடப்பட்ட விவகாரத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மன்னிப்பு கோரியுள்ளது. #BritishAirways
ஆகஸ்டு முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயன்படுத்திய சுமார் 3.8 லட்சம் வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மன்னிப்பு கோரியிருக்கிறது. 20 வருடங்களாக இணைய சேவை வழங்கி வரும் வேளையில் இதுவரை இது போன்று நடந்ததே இல்லை என பிரிட்டிஷ் ஏர்வேஸ் தலைமை நிர்வாகியான அலெக்ஸ் க்ரூஸ் தெரிவித்தார்.
ஹேக்கர்கள் விமான நிறுவனத்தின் என்க்ரிப்ஷனை முறியடிக்கவில்லை, எனினும் வாடிக்கையாளர்களின் விவரங்கள் எவ்வாறு அபகரிக்கப்பட்டன என்பது குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. தகவல்களை திருட ஹேக்கர்கள் மிகவும் கடினமான வழிமுறையை பின்பற்றி இருக்கின்றனர் என க்ரூஸ் தெரிவித்தார்.
தகவல் திருட்டைத் தொடர்ந்து பணத்தை பறிக்கொடுத்த பயனர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். தேசிய சைபர் க்ரைம் யூனிட், மற்றும் தேசிய குற்ற ஆணையம் உள்ளிட்டவை ஹேக்கிங் விவகாரம் சார்ந்த விசாரனையை துவங்கி இருக்கின்றன.
ஆகஸ்டு 21-ம் தேதி முதல் செப்டம்பர் 5 வரை ப்ரிடிஷ் சேவையை பயன்படுத்தியவர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் அபகரிக்கப்பட்டு இருப்பதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்கள் நீடித்துள்ள ஹேக்கிங் பயணம் அல்லது பாஸ்போர்ட் விவரங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
Next Story