என் மலர்
தொழில்நுட்பம்

இணையத்தில் லீக் ஆன விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன்
விவோ நிறுவனத்தின் நெக்ஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பீஜிங்:
சீனாவில் ஜூன் 12-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் நெக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் விவோ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் மற்றும் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, நாட்ச் இல்லாத வடிவமைப்பு கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தை பிராக்சிமிட்டி சென்சார் மற்றும் பெய்சோ எலெக்ட்ரிக் செராமிக் அகௌஸ்டிக் சிஸ்டம் பன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 4.0 இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

விவோ நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.59 இன்ச் 2316x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 ஐபிஎஸ் டிஸ்ப்ளே
- 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
- அட்ரினோ 630 GPU (நெக்ஸ் எஸ்)
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்
- அட்ரினோ 616 GPU (நெக்ஸ்)
- 8 ஜிபி ரேம் (நெக்ஸ் எஸ்)
- 6 ஜிபி ரேம் (நெக்ஸ்)
- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஃபன்டச் ஓஎஸ் 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் (நெக்ஸ் எஸ்)
- பின்புறம் கைரேகை சென்சார் (நெக்ஸ்)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
விவோ நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஸ்மார்ட்போன்கள் வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவோ நெக்ஸ் எஸ் விலை 6998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.73,270) என நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் நெக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை 4998 யுவான் (இன்திய மதிப்பில் ரூ.52,330) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






