search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    விவோ நெக்ஸ் புதிய டீசர் வெளியீடு

    விவோ நிறுவனம் தனது நெக்ஸ் ஸ்மார்ட்போனிற்கான புதிய டீசரை வெளியிட்டுள்ளது. விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ஜூன் 12-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    பீஜிங்:

    விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் ஜூன் 12-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதி செய்யும் டீசர்களை விவோ ஏற்கனவே வெளியிட்டிருக்கும் நிலையில், சமீபத்திய டீசரில் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனின் மிக முக்கிய அம்சம் சார்ந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.

    முன்னதாக 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ கான்செப்ட் ஸ்மார்ட்போனில் பாப்-அப் செல்ஃபி கேமரா அம்சம் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருப்பது விவோ வெளியிட்டிருக்கும் புதிய டீசரில் தெரியவந்துள்ளது.

    ஏற்கனவே விவோ நெக்ஸ் ஏ, நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஸ்மார்ட்போன்கள் சீன வலைத்தளத்தில் கசிந்திருந்தன. மூன்று வேரியன்ட்களும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டிருக்கும் என இந்த தகவல்களில் தெரியவந்தது. விவோ தனது வெய்போ கணக்கில் பதிவிட்டு இருக்கும் புதிய டீசரில் நெக்ஸ் ஸ்மார்ட்போனில் பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது.



    முன்னதாக முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன் என அழைக்கப்பட்ட நிலையில், சீன வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் புதிய டீசரில் புதிய ஸ்மார்ட்போன் நெக்ஸ் என அழைக்கப்படுவது உறுதியாகியுள்ளது. புதிய டீசரின் படி விவோ அபெக்ஸ் ஸ்மார்ட்போனில் அதிநவீன தொழில்நுட்பம், ஹால்ஃப்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் இதர அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனின் பிரீமியம் வேரியன்ட் பாப்-அப் செல்ஃபி கேமரா, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    விவோ நெக்ஸ் பேஸ் மாடல் விலை CNY 4999 (இந்திய மதிப்பில் ரூ.52,600) என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் CNY 3798 (இந்திய மதிப்பில் ரூ.40,000) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    மற்ற அம்சங்களை பொருத்த வரை 5.99 இன்ச், 18:9 ரக டிஸ்ப்ளே, 8 எம்பி பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் விவோ நெக்ஸ் அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்கள் அறிமுக விழாவில் தெரியவரும்.
    Next Story
    ×