என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்

ஏப்ரல் மாதத்தில் மட்டும் 71 லட்சம் இந்திய பயனர்களை தடை செய்த வாட்ஸ்அப்
- பயனர்களின் கருத்துகளை வாட்ஸ்ஆப் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.
- விதிமுறைகளை மீறுவோர் மீது தொடர்ந்து இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்அப்ஸ் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 71 லட்சம் இந்திய பயனர்களை தடை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைகள் ஆகியவற்றை மீறியதற்கான தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பயனர்கள் பாதுகாப்பு சூழலை பராமரிக்கும் வகையில் விதிமுறைகளை மீறுவோர் மீது தொடர்ந்து இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.
வாட்ஸ்அப்-பின் தனியுரிமை கொள்கைகளை (privacy policies) மீறும் பயனர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு மாதந்தோறும் லட்சக்கணக்கான இந்திய பயனர்களை தடை செய்து வருகிறது.
அதனடிப்படையில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரை 71 லட்சம் இந்திய பயனர்களை நீக்கியுள்ளது. இதில் 13 லட்சத்து 2 ஆயிரம் பயனர்களை, அவர்களுடைய எந்தவித ரிப்போர்ட் பெறாமல் தடை செய்துள்ளது.
வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரப்பும் பயனர்களை நவீன் தொழில்நுட்பம் மூலம் தானாகவே கண்டறியும் வகையில் வாட்அஸ் ஏற்பாடு செய்துள்ளது.
பயனர்களின் கருத்துகளை வாட்ஸ்ஆப் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. இது கணக்குகளை ஸ்கேன் செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது. பயனர்கள் ரிப்போர்ட் அல்லது கருத்துகனை பிளாக் செய்யும்போது, வாட்அப்பின் சிஸ்டம் அதை எடுத்துக் கொள்கிறது. அதன்மூலம் கூடுதல் விசாரணை செய்யப்பட்டு, கணக்குகள் தடை செய்ய அனுமதிக்கிறது.






