search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    கம்மி விலையில் விற்பனைக்கு வந்த ஜியோபுக் 4ஜி லேப்டாப்
    X

    கம்மி விலையில் விற்பனைக்கு வந்த ஜியோபுக் 4ஜி லேப்டாப்

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முதல் லேப்டாப் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    • முன்னதாக இந்த லேப்டாப் விற்பனை அரசு ஊழியர்களுக்காக மட்டும் GeM வலைதளத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ, தனது முதல் லேப்டாப் மாடல் விற்பனையை துவங்கி இருக்கிறது. 4ஜி கனெக்டிவிட்டி கொண்ட ஜியோபுக் லேப்டாப்பை தற்போது அனைவரும் வாங்கிட முடியும். இந்தியாவில் ஜியோபோன் பெற்ற வெற்றி ஜியோபுக் லேப்டாப்பிலும் பிரதிபலிக்கச் செய்யும் வகையில் இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஜியோபுக் மாடலில் 11.6 இன்ச் 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட HD டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் 64 பிட், 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சிபியு உடன் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்பில் கூலிங் ஃபேன் எதுவும் பொருத்தப்படவில்லை. இதன் அதிகபட்ச மெமரி 128 ஜிபி ஆகும்.

    இந்த லேப்டாப் 32 ஜிபி மெமரியுடன் கிடைக்கிறது. இத்துடன் ஜியோ ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. புதிய ஜியோபுக் மாடலை பல்வேறு இந்திய மொழிகளில் இயக்க முடியும். இத்துடன் ஏராளமான ஜியோ செயலிகள் மற்றும் மைக்ரோசாப்ட் 365 சேவைகள் இந்த லேப்டாப்பில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய ஜியோபுக் லேப்டாப் ரிலையன்ஸ் டிஜிட்டல் வலைதளத்தில் ரூ. 15 ஆயிரத்து 799 எனும் விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த தளத்தில் எத்தனை யூனிட்களுக்கான ஸ்டாக் இருப்பில் உள்ளது என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. மேலும் இந்த லேப்டாப் விற்பனை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    Next Story
    ×