search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இருவித அளவுகளில் புது ஒன்பிளஸ் மாணிட்டர்கள் இந்தியாவில் அறிமுகம்
    X

    இருவித அளவுகளில் புது ஒன்பிளஸ் மாணிட்டர்கள் இந்தியாவில் அறிமுகம்

    • ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் இரண்டு புது மாணிட்டர்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இரண்டு புது மாணிட்டர்களிலும் டைப் சி போர்ட், யுஎஸ்பி பிடி சப்போர்ட், 18 வாட் அவுட்புட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஒன்பிளஸ் மாணிட்டர் X 27 மற்றும் மாணிட்டர் E 24 மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் மாணிட்டர் E 24 மாடலில் FHD 75Hz டிஸ்ப்ளே, மாணிட்டர் X 27 மாடலில் 2K 165Hz HDR டிஸ்ப்ளே, 1ms ரெஸ்பான்ஸ் டைம், AMD ஃபிரீசின்க் பிரீமியம், டிஸ்ப்ளே HDR 400 கலர் உள்ளது. இரு மாணிட்டர்களிலும் டைப் சி போர்ட், யுஎஸ்பி பிடி சப்போர்ட், 18 வாட் அவுட்புட் உள்ளது.

    இரண்டு புது மாணிட்டர்களிலும் பில்ட்-இன் கேபில் மேனேஜ்மெண்ட் அம்சம் உள்ளது. இதனால் வயர் ஒருங்கிணைப்பது பற்றி பயனர்கள் எவ்வித சிரமும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒன்பிளஸ் மாணிட்டர் X 27 மாடலில் உறுதியான மெட்டல் ஸ்டாண்ட், டெலிகேட் மெட்டல் ஃபினிஷ், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிசைன், சுழற்றக் கூடிய வியூவிங் ஆங்கில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் உயரத்தை 0 முதல் 130mm வரை அட்ஜஸ்ட் செய்ய முடியும்.

    ஒன்பிளஸ் மாணிட்டர் X 27 அம்சங்கள்:

    27 இன்ச் 2560x1440 பிக்சல் QHD IPS டிஸ்ப்ளே, 165Hz ரிப்ரெஷ் ரேட்

    1ms ரெஸ்பான்ஸ் டைம், 350 நிட்ஸ் பிரைட்னஸ், 95% DCI-P3 கலர் கமுட்

    178 டிகிரி வியூவிங் ஆங்கில், VESA டிஸ்ப்ளேHDR 400, TUV ரெயின்லாந்து சான்று

    AMD ஃபிரீசின்க் பிரீமியம்

    ஸ்டாண்டர்டு, மூவி, பிக்ச்சர், வெப், கேம் போன்ற பிக்ச்சர் மோட்கள்

    ஸ்ப்லிட் ஸ்கிரீன் சப்போர்ட்

    உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி

    1x யுஎஸ்பி சி (65 வாட் பவர் டெலிவரி), 1X HDMI v2.1, 1x DP v1.4

    2x யுஎஸ்பி 3.0 (5வாட் சார்ஜிங் சப்போர்ட்), 1x ஹெட்போன் ஜாக்

    ஒன்பிளஸ் மாணிட்டர் E 24 அம்சங்கள்

    24 இனஅச் 1920x1080 பிக்சல் FHD IPS டிஸ்ப்ளே, 75Hz ரிப்ரெஷ் ரேட்

    5ms ரெஸ்பான்ஸ் டைம், 250 நிட்ஸ் பிரைட்னஸ், 178 டிகிரி வியூவிங் ஆங்கில், அடாப்டிவ் சின்க்

    TUV ரெயின்லாந்து சான்று

    8mm ஸ்லிம் மூன்று பக்கம் பெசல் இல்லா டிசைன்

    மெட்டல் ஸ்டாண்ட், ஆங்கில் அட்ஜஸ்ட் செய்யும் வசதி

    1x யுஎஸ்பி சி (18 வாட் பவர் டெலிவரி), 1x HDMI v1.4, 1x VGA, 1x ஹெட்போன் ஜாக்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒன்பிளஸ் மாணிட்டர் X 27 மாடலின் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி துவங்குகிறது. ஒன்பிளஸ் மாணிட்டர் E 24 விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் மாணிட்டர் X27 வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 தள்ளுபடி பெறலாம். இத்துடன் ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×