என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்

கேமரா, அசத்தல் AI அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம் - விலை, என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
- 164 மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் பணிகளையும், போன் அழைப்புகளை ஏற்று பேசவும், மறுக்கவும் உதவும்.
- இந்த கண்ணாடியில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதால், எதிரில் இருக்கும் காட்சிகளை பதிவு செய்யலாம்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவான ஸ்மார்ட் கண் கண்ணாடிகள் ஆன்லைன் விற்பனை தளங்களில் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட் கிளாஸ் மாடல் சாட் ஜிபிடியில் இயங்கக்கூடியது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் உங்களது ஸ்மார்ட்போனுடன் இணைந்து, பல்வேறு பணிகளை செய்யும் திறன் கொண்டிருக்கிறது.
குறிப்பாக, 164 மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் பணிகளையும், போன் அழைப்புகளை ஏற்று பேசவும், மறுக்கவும் உதவும். கூடுதலாக, இந்த கண்ணாடியில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதால், எதிரில் இருக்கும் காட்சிகளை பதிவு செய்யலாம். அதேபோல நம் அருகில் பேசுபவர்களின் உரையைகூட வாய்ஸ் ரெக்கார்டிங் முறையில், குரல் ஒலியை ஆங்கில வார்த்தைகளாகவும் மாற்றி, ஸ்மார்ட்போனில் பதிவு செய்ய முடியும்.
இவ்வளவு வசதிகளுடன், கண்களை பாதிக்காத வகையில் UV பாதுகாப்பு, Blue Light பாதுகாப்பு போன்ற கண் ஆரோக்கிய விஷயங்களை கொண்டுள்ளது. 200 மணிநேரம் இயங்கும் இந்த ஏ.ஐ. ஸ்மார்ட் கண் கண்ணாடியின் விலை ரூ.8,079 ஆகும். இந்த ஸ்மார்ட் ஏஐ கண் கண்ணாடி தண்ணீரிலும் பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.






