என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இன்று முதல் UPI பரிவர்தனைகளுக்கு PIN நம்பர் தேவையில்லை.. கைரேகை போதும்!
    X

    இன்று முதல் UPI பரிவர்தனைகளுக்கு PIN நம்பர் தேவையில்லை.. கைரேகை போதும்!

    • டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இதை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் PIN (இரகசிய எண்) மூலம் நிதி மோசடிகள் மற்றும் அருகில் உள்ளவர்களால் திருட்டுத்தனமாக PIN பார்க்கப்படுவது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன.

    இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இதை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, இனி யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு PIN நம்பருக்குப் பதிலாக பயோமெட்ரிக் அங்கீகார வசதி (Biometric Authentication) அறிமுகப்படுத்தப்படுகிறது.

    பயனர்கள் இனி PIN நம்பரை உள்ளீடு செய்வதற்கு மாற்றாக கைரேகை அல்லது முக அங்கீகாரம் (Face Recognition) மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்

    இந்த அங்கீகாரச் சரிபார்ப்புக்கு, ஆதார் சிஸ்டமில் சேமிக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் தரவுகள் பயன்படுத்தப்படும். இந்த புதிய முறை இன்று (அக்டோபர் 8) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    இந்த புதிய முறை, பயனர்களின் பரிவர்த்தனைகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ள வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.

    Next Story
    ×