என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதிய கேஜெட்டுகள்
16 ஜி.பி. ரேமுடன் உருவாகும் சியோமி Foldable போன் - எந்த மாடல்?
- சியோமியின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 16 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தகவல்.
- புதிய சியோமி ஸ்மார்ட்போன் 100 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கலாம்.
சியோமி நிறுவனத்தின் மிக்ஸ் ஃபோல்டு 4 ஸ்மார்ட்போன் விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சியோமி மிக்ஸ் ஃபோல்டு 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இந்த மாடல் உருவாகி இருக்கிறது. புதிய மிக்ஸ் ஃபோல்டு 4 குறித்து சியோமி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், புதிய சியோமி மிக்ஸ் ஃபோல்டு 4 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர், சார்ஜிங் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ள தகவல்களின்படி சியோமி மிக்ஸ் ஃபோல்டு 4 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், 1 டி.பி. மெமரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மாடலின் கிரீஸ் முந்தைய மாடலை விட சிறியதாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
புகைப்படங்களை எடுக்க மிக்ஸ் ஃபோல்டு 4 மாடலில் 50MP பிரைமரி கேமரா, புதிதாக பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்படலாம். இத்துடன் இருவழி செயற்கைக்கோள் சார்ந்த தகவல் பரிமாற்ற வசதி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய மிக்ஸ் ஃபோல்டு 4 மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். ேட்டரி, 100 வாட் வயர்டு சார்ஜிங் வழங்கப்படலாம்.