search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ரூ. 77 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் டெக்னோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்
    X

    ரூ. 77 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் டெக்னோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    • டெக்னோ மொபைல் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உற்பத்தி துவங்கி இருக்கிறது.
    • புதிய ஃபேண்டம் V ஃபோல்டு மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

    டெக்னோ மொபைல் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கியுள்ளது. மேக்-இன்-இந்தியா திட்டத்தின் கீழ் டெக்னோ பிராண்டின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உற்பத்தி நடைபெற்று வருகிறது. புதிய ஃபேண்டம் V ஃபோல்டு மாடலின் உற்பத்தி நொய்டாவில் உள்ள ஆலையில் நடைபெற்று வருகிறது. இங்கு ஆண்டிற்கு 24 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    பாப், ஸ்பார்க், போவா, கேமன் மற்றும் ஃபேண்டம் சீரிசின் கீழ் பல்வேறு மாடல்களில் சந்தை மற்றும் பிரிவு ஸ்மார்ட்போன்களில் முதல் முறை அம்சங்களை வழங்குவதில் டெக்னோ முன்னுரிமை அளித்து வருகிறது. மிட் முதல் பிரீமியம் பிரிவுகளில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய டெக்னோ திட்டமிட்டு வருகிறது.

    மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு ஆகும். இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கஸ்டமைஸ் செய்யப்பட்டு, டூயல் சிம், டூயல் 5ஜி போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இதில் உள்ள பிராசஸர் 4 நானோமீட்டர் முறையில் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. இது தலைசிறந்த திறன் மற்றும் குறைந்த மின்திறன் எடுத்துக் கொள்கிறது.

    டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு அம்சங்கள்:

    7.65 இன்ச் 2296x2000 பிக்சல் 2K+ 10 முதல் 120Hz LTPO AMOLED டிஸ்ப்ளே

    6.42 இன்ச் 1080x2550 பிக்சல் FHD+ 10 முதல் 120Hz LTPO AMOLED வெளிப்புற டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர்

    மாலி G710 MC10 GPU

    12 ஜிபி ரேம்

    256 ஜிபி, 512 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஹைஒஎஸ் 13 ஃபோல்டு

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    13MP அல்ட்ரா வைடு கேமரா

    50MP டெலிபோட்டோ கேமரா

    32MP வெளிப்புற செல்ஃபி கேமரா

    16MP உள்புற செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    டெக்னோ நிறுவனத்தின் புதிய ஃபேண்டம் V ஃபோல்டு ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ஏப்ரல் 11 ஆம் வெளியிட இருக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 77 ஆயிரத்து 777 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையில் பங்கேற்க ஏப்ரல் 12 ஆம் தேதி அமேசான் வலைதளத்தில் நடைபெறும் விற்பனையில் கலந்து கொள்ளலாம்.

    Next Story
    ×