search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ரூ. 999 விலையில் வேற லெவல் அம்சங்களுடன் நாய்ஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்
    X

    ரூ. 999 விலையில் வேற லெவல் அம்சங்களுடன் நாய்ஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

    • இந்த இயர்பட்ஸ் 50 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.
    • இந்த இயர்பட்ஸ் 40ms வரை லோ லேடன்சி மோட் கொண்டிருக்கிறது.

    நாய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்- "பாப் பட்ஸ்" பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. நாய்ஸ் கலர்பிட் பல்ஸ் 4 ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டை தொடர்ந்து புதிய இயர்பட்ஸ் மாடலை நாய்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

    புதிய நாய்ஸ் பாப் பட்ஸ் மாடலில் 10 மில்லிமீட்டர் டிரைவர்கள், குவாட் மைக் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது அழைப்புகளின் போது மேம்பட்ட அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கிறது.

    மேலும் இன்ஸ்டா சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 150 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும். இத்துடன் ஹைப்பர் சின்க் கனெக்ஷன் தொழில்நுட்பம், 40ms வரை லோ லேடன்சி மோட், IPX5 ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    நாய்ஸ் பாப் பட்ஸ் அம்சங்கள்:

    10mm டிரைவர்கள்

    ப்ளூடூத் 5.3

    டச் கண்ட்ரோல்

    அல்ட்ரா லோ லேடன்சி

    குவாட் மைக் மற்றும் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன்

    40 மணி நேரத்திற்கு பிளேபைக் டைம்

    இன்ஸ்டா சார்ஜ் தொழில்நுட்பம்

    ஹைப்பர் சின்க் தொழில்நுட்பம்

    IPX5 ஸ்பிலாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட்

    புதிய நாய்ஸ் பாப் பட்ஸ் மாடல் மூன் பாப், ஸ்டீல் பாப், ஃபாரெஸ்ட் பாப் மற்றும் லிலக் பாப் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 999 ஆகும். விற்பனை நாய்ஸ் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    Next Story
    ×