என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 5, Z போல்டு 5 இந்திய விலை இவ்வளவு தான்..
    X

    சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 5, Z போல்டு 5 இந்திய விலை இவ்வளவு தான்..

    • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ப்ளிப் 5, Z போல்டு 5 இந்திய விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
    • முந்தைய கேலக்ஸி Z ப்ளிப் 4 விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z போல்டு 5 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 5 மாடல்களை தென் கொரியாவில் நேற்று (ஜூலை 26) நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்தது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன்களுக்கான இந்திய முன்பதிவும் துவங்கியது. தற்போது கேலக்ஸி Z ப்ளிப் 5 மற்றும் கேலக்ஸி Z போல்டு 5 மாடல்களின் விலை விவரங்களை சாம்சங் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    அதன்படி கேலக்ஸி Z ப்ளிப் 5 மாடலின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என்றும் கேலக்ஸி Z போல்டு 5 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி Z ப்ளிப் 4 மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்றும் கேலக்ஸி Z போல்டு 5 மாடலின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வேரியன்ட் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. கேலக்ஸி Z ப்ளிப் 5 மாடல் மின்ட், கிரீம், கிராஃபைட் மற்றும் லாவென்டர் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி Z போல்டு 5 மாடல் ஐசி புளூ, கிரீம் மற்றும் பேன்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    கேலக்ஸி Z ப்ளிப் 5 ( 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி) ரூ. 99 ஆயிரத்து 999

    கேலக்ஸி Z ப்ளிப் 5 ( 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி) ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999

    கேலக்ஸி Z போல்டு 5 ( 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி) ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 999

    கேலக்ஸி Z போல்டு 5 ( 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி) ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 999

    கேலக்ஸி Z போல்டு 5 ( 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி) ரூ. 1 லட்சத்து 84 ஆயிரத்து 999

    இந்தியாவில் கேலக்ஸி Z ப்ளிப் 5 மற்றும் கேலக்ஸி Z போல்டு 5 மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு சாம்சங் லைவ், அமேசான் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    Next Story
    ×