search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
    X

    போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

    • போக்கோவின் GT போன்கள் பிரத்யேகமாக கேமிங்கிற்காக மட்டும் தயாரிக்கப்பட்டு இருந்தது.
    • போக்கோ F4 மாடல் 64MP டிரிபிள் கேமராவுடன் வர இருக்கிறது.

    போக்கோ நிறுவனம் தனது அடுத்த F சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி உள்ளது. போக்கோ F4 எனப்படும் இந்த மாடல் ரெட்மி K40S-ன் ரீ பிராண்டாக தயாராகி இருக்கிறது. இந்நிலையில், போக்கோ F4 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த போன் வருகிற ஜூன் 23-ந் தேதி நடைபெற உள்ள லான்ச் ஈவண்ட்டில் வெளியிடப்பட உள்ளது.

    போக்கோ F4 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் GT போன்களைப் போல் அல்லாமல் ஆல்ரவுண்ட் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. GT போன்கள் பிரத்யேகமாக கேமிங்கிற்காக மட்டும் தயாரிக்கப்பட்டு இருந்தது. போக்கோ F4 ஸ்மார்ட்போன் ரெட்மி K40S மாடலின் ரீ பிராண்டாக இருக்கும் என கூறப்படுவதால், அதில் உள்ளபடியே ஸ்னாப்டிராகன் 870 புராசசர் உடன் வர உள்ளது. அதேபோல் FHD+ E4 AMOLED டிஸ்ப்ளே இதில் இடம்பெற்றுள்ளது.


    கேமராவை பொருத்தவரை ரெட்மி K40S மாடலில் 48MP டிரிபிள் கேமரா செட் அப் உடன் இருக்கும், ஆனால் போக்கோ F4 மாடல் 64MP டிரிபிள் கேமராவுடன் வர இருக்கிறது. மேலும் இது 4,520mAh பேட்டரி மற்றும் 67W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைப் சி சார்ஜிங் போர்ட், ஆண்ட்ராய்டு 12, 6.69 இன்ச் டிஸ்பிளே, 12ஜிபி ரேம் 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் என பல்வேறு சிறப்பம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது. ஜூன் 23-ந் தேதி தான் இதன் விலை என்ன என்பது தெரியவரும்.

    Next Story
    ×