search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    உலகின் மெல்லிய ஃபோல்டபில் போன் - ஹானர் மேஜிக் V2 அறிமுகம்
    X

    உலகின் மெல்லிய ஃபோல்டபில் போன் - ஹானர் மேஜிக் V2 அறிமுகம்

    • ஹானர் மேஜிக் V2 மாடல் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டுள்ளது.
    • இந்த ஃபோல்டபில் போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

    ஹானர் மேஜிக் V2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஹானர் ஃபோல்டபில் போனின் எடை 231 கிராம், தடிமன் 9.9 மில்லிமீட்டர்கள் ஆகும். அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் இதுவரை வெளியான மடிக்கக்கூடிய சாதனங்களில் மிகவும் மெல்லிய மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

    முன்னதாக உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை சியோமி மிக்ஸ் ஃபோல்டு 2 பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சியோமி மிக்ஸ் ஃபோல்டு 2 மாடலின் தடிமன் 11.2 மில்லிமீட்டர்கள், எடை 262 கிராம்கள் ஆகும். புதிய ஹானர் மேஜிக் V2 மாடலில் மிக மெல்லிய சிலிகான் கார்பன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

    அம்சங்களை பொருத்தவரை ஹானர் மேஜிக் V2 மாடல் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 50MP பிரைமரி கேமரா சென்சார், 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், OIS, மேக்ரோ ஆப்ஷன், 20MP டெலிபோட்டோ கேமரா, OIS, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹானர் மேஜிக் V2 மாடலில் 7.92 இன்ச் மடிக்கக்கூடிய LTPO OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 2344x2156 பிக்சல் ரெசல்யூஷன், 6.43 இன்ச் LTPO டிஸ்ப்ளே, 2376x1060 பிக்சல், ஸ்டைலஸ் சப்போர்ட், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 1 டிபி வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் ஹானர் சூப்பர்சார்ஜ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹானர் மேஜிக் V2 ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை RMB 8999, இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 03 ஆயிரம் என்று துவங்குகிறது. 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி கொண்ட ஹானர் மேஜிக் V2 அல்டிமேட் எடிஷன் விலை RMB 11999, இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 37 ஆயிரத்து 300 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×