என் மலர்tooltip icon

    கணினி

    ரூ. 1299 விலையில் அறிமுகமான புதிய விங்ஸ் ஃபேண்டம் 380
    X

    ரூ. 1299 விலையில் அறிமுகமான புதிய விங்ஸ் ஃபேண்டம் 380

    • விங்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன் கேம் மோட், 40ms அல்ட்ரா லோ லேடன்சி ஆடியோ கொண்டிருக்கிறது.
    • புதிய விங்ஸ் ஃபேண்டம் 380 மாடல் வைட் மற்றும் பிளாக் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது.

    விங்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஃபேண்டம் 380 இயர்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய விங்ஸ் ஃபேண்டம் 380 முழு சார்ஜ் செய்தால் 50 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. ANC மோடில் இந்த இயர்பட்ஸ் 35 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. இதில் உள்ள குவாட் மைக் ENC-இல் நா்கு மைக்குகள் உள்ளன. இவை எவ்வித சூழலில் இருந்து பேசினாலும், மற்றவர்களுக்கு குரல் தெளிவாக கேட்க செய்கிறது.

    புதிய விங்ஸ் ஃபேண்டம் 380 மாடலில் ப்ளூடூத் 5.3, ஸ்பீடு சின்க், ஒபன் அண்ட் ஆன், கேம் மோட், 40ms அல்ட்ரா லோ லேடன்சி ஆடியோ, 13mm ஹை-ஃபிடிலிட்டி கம்போசிட் டிரைவர்கள், போல்டு பேஸ் மற்றும் ENC மைக்குகள் உள்ளன. புதிய இயர்பட்ஸ் மூலம் விங்ஸ் நிறுவனம் ஆஃப்லைன் தளத்தில் கால்பதிக்கிறது.

    விங்ஸ் ஃபேண்டம் 380 அம்சங்கள்:

    எர்கோனோமிக் டிசைன்

    13mm ஹை-ஃபிடிலிட்டி கம்போசைட் டிரைவர்

    டிரான்ஸ்பேரண்ட் மோடில் அதிகபட்சம் 30db வரையிலான ANC

    போல்டு பேஸ் தொழில்நுட்பம்

    40ms அல்ட்ரா லோ லேடன்சி வழங்கும் பிரத்யேக கேம் மோட்

    குவாட் ENC மைக்ரோபோன்

    டச் கண்ட்ரோல்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்

    ப்ளூடூத் 5.3, ஸ்பீடு சின்க்

    அதிகபட்சம் 50 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி

    டைப் சி புல்லட் ஃபாஸ்ட் சார்ஜ் சப்போர்ட்

    IPX5 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட்

    விங்ஸ் சின்க் ஆப் சப்போர்ட்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    விங்ஸ் ஃபேண்டம் 380 மாடல் அறிமுக சலுகையாக பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை விங்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

    Next Story
    ×