search icon
என் மலர்tooltip icon

    கணினி

    25 மணி நேர பிளேபேக் வழங்கும் ஒப்போ என்கோ ஏர்3 இந்தியாவில் அறிமுகம்
    X

    25 மணி நேர பிளேபேக் வழங்கும் ஒப்போ என்கோ ஏர்3 இந்தியாவில் அறிமுகம்

    • ஒப்போ நிறுவனம் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 13.4mm பாலிமர் கம்போசிட் கொண்டிருக்கிறது.
    • புது ஒப்போ இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் ஆறு மணி நேரத்திற்கும், மொத்தத்தில் 25 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.

    ஒப்போ நிறுவனம் தனது ரெனோ8 T 5ஜி ஸ்மார்ட்போனுடன் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஒப்போ என்கோ ஏர்3 இயர்பட்ஸ் 13.4mm பாலிமர் கம்போசிட் மற்றும் ட்ரான்ஸ்லுசெண்ட் கேஸ் கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள கேடென்ஸ் ஹைபை5 டிஜிட்டல் சிக்னல் பிராசஸர் மேம்பட்ட ஸ்பீச் ரிகக்னிஷன் வழங்குகிறது. மேலும் ஒப்போ அலைவ் ஆடியோ உடன் ஔரல் அவுட்புட் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ப்ளூடூத் 5.3, 47ms அல்ட்ரா லோ-லேடன்சி, 25 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் கூகுள் ஃபாஸ்ட் பேர் வசதி கொண்டிருப்பதால், ஒரே சமயத்தில் இரு சாதனங்களுடன் இணைத்துக் கொள்ளும் வசதி உள்ளது.

    ஹால்ஃப் இன்-இயர் டிசைன் கொண்டிருக்கும் ஒப்போ என்கோ ஏர்3 ஒவ்வொரு இயர்பட்-ம் அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக இந்த இயர்பட்ஸ் 25 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது.

    ஒப்போ என்கோ ஏர்3 அம்சங்கள்:

    13.4mm பாலிமர் கம்போசிட் டிரைவர்

    ஃபிளாக்ஷிப் தர N48 நியோடிமியம் காந்தம், 1.9m காப்பர்-அலுமினியம் அலாய் காயில்கள்

    ப்ளூடூத் 5.3

    கூகுள் ஃபாஸ்ட் பேர்

    புதிய ஹைபை டிஎஸ்பி

    டச் கண்ட்ரோல்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்

    27 எம்ஏஹெச் பேட்டரி (இயர்பட்ஸ்)

    300 எம்ஏஹெச் பேட்டரி (சார்ஜிங் கேஸ்)

    பத்து நிமிட சார்ஜில் இரண்டு மணி நேரத்திற்கான பிளேபேக்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒப்போ என்கோ ஏர்3 மாடலின் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை பிப்ரவரி 10 ஆம் தேதி ப்ளிப்கார்ட், அமேசான், ஒப்போ ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் துவங்க இருக்கிறது.

    Next Story
    ×