search icon
என் மலர்tooltip icon

    கணினி

    ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட கிஸ்மோர் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்!
    X

    ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட கிஸ்மோர் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்!

    • கிஸ்மோர் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் ஏராளமான வாட்ச் ஃபேஸ் மற்றும் மெனு ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
    • புது ஸ்மார்ட்வாட்ச் ஸ்ப்லிட் ஸ்கிரீன் மல்டி-டாஸ்கிங் வசதியுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

    கிஸ்மோர் நிறுவனத்தின் புதிய கிஸ்ஃபிட் பிலாஸ்மா ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய கிஸ்ஃபிட் பிலாஸ்மா மாடலில் 1.9 இன்ச் 2.5D டிஸ்ப்ளே, 240x280 பிக்சல் ரெசல்யூஷன், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. இதன் வலதுபுறம் உள்ள சுழலும் கிரவுன் கொண்டு வாட்ச் ஃபேஸ், மெனு ஆப்ஷன்களை இயக்க முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் ஸ்ப்லிட் ஸ்கிரீன் மல்டி டாஸ்கிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    கிஸ்ஃபிட் பிலாஸ்மா மாடலில் பயனர் உடல்நலனை காக்க உதவும் ஃபிட்னஸ் அம்சங்கள், ஜிபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் யோகா, நீச்சல், ஓட்டப்பயிற்சி, நடைபயிற்சி, கூடைபந்து, இறகு பந்து, கால்பந்து, மிதிவண்டி, ஹைகிங் மற்றும் டிரெகிங் உள்ளிட்டவைகளை டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 24x7 இதய துடிப்பு சென்சார், உடல் வெப்பநிலை, ஸ்லீப், SpO2 மற்றும் ஸ்டெப் டிராக்கிங் போன்ற வசதிகளும் உள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை பில்ட்-இன் வாய்ஸ் அசிஸ்டண்ட், ப்ளூடூத் காலிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, IP67 தரச்சான்று பெற்ற வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    கிஸ்ஃபிட் கிஸ்மோர் பிலாஸ்மா அம்சங்கள்:

    பிரீமியம் கேசிங் மற்றும் மென்மையான சிலிகான் ஸ்டிராப்

    1.9 இன்ச் UHD ஸ்கிரீன், 240x280 பிக்சல், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்

    ப்ளூடூத் 5 மற்றும் காலிங் வசதி

    ஜிபிஎஸ்

    சுழலும் கிரவுன் கண்ட்ரோல்

    5 மெனு ஸ்டைல்கள், பிரைவசி லாக், ஸ்ப்லிட் ஸ்கிரீன்

    வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி

    உடல் ஆரோக்கிய சென்சார்கள்

    கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்

    பில்ட் இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர்

    IP 67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்

    ஏழு நாட்களுக்கான பேட்டரி பேக்கப்

    வயர்லெஸ் சார்ஜிங் வசதி

    இந்திய சந்தையில் கிஸ்ஃபிட் பிலாஸ்மா ஸ்மார்ட்வாட்ச்- பிளாக், நேவி புளூ மற்றும் பர்கண்டி என மூன்ற வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் உண்மை விலை ரூ. 1999 ஆகும். விற்பனை கிஸ்ஃபிட் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஃப்ளிப்கார்டில் நடைபெறுகிறது.

    Next Story
    ×