search icon
என் மலர்tooltip icon

    கணினி

    ஏழு மணி நேர பேட்டரி பேக்கப் கொண்ட டிசோ இயர்பட்ஸ் அறிமுகம்!
    X

    ஏழு மணி நேர பேட்டரி பேக்கப் கொண்ட டிசோ இயர்பட்ஸ் அறிமுகம்!

    • ரியல்மி நிறுவனத்தின் துணை பிராண்டு டிசோ அக்சஸரீக்கள் விற்பனையில் வேகமாக வளர்ந்து வருகிறது.
    • டிசோ பிராண்டின் புது இயர்பட்ஸ் பட்ஜெட் பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    டிசோ பிராண்டின் புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் சத்தமின்றி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டிசோ பட்ஸ் Z பவர் என அழைக்கப்படும் புது இயர்பட்ஸ் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த டிசோ பட்ஸ் Z ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். டிசோ பிராண்டின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன் பட்ஜெட் பிரிவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய டிசோ பட்ஸ் Z பவர் மாடலில் 10 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள், என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, பூஸ்ட் பிளஸ் அல்காரிதம், 88ms லோ லேடன்சி மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. செமி இன்-இயர் ரக ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் என்ற வகையில், இந்த மாடல் ஸ்டெம் மற்றும் சிலிகான் இயர் டிப்களை கொண்டிருக்கிறது.

    IPX4 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் டிசோ பட்ஸ் Z பவர் மாடலின் அம்சங்களை ஸ்டெம் பகுதியில் இருந்து இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 380 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் டிசோ பட்ஸ் Z பவர் மாடல் சார்ஜிங் கேஸ் சேர்த்து 30 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. ஒவ்வொரு இயர்பட்-ம் ஏழு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

    ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருப்பதால் இந்த இயர்பட்ஸ்-ஐ பத்து நிமிடங்களுக்கு குயிக் சார்ஜ் செய்யும் போது மூன்று நேரத்திற்கான பேட்டரி பேக்கப் கிடைக்கும். லீஃப் கிரீன், ஆனிக்ஸ் பிளாக் மற்றும் பியல் வைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் டிசோ பட்ஸ் Z பவர் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

    Next Story
    ×