search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைர நகைகள்"

    • வைர நகைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுப்பதற்காக விற்பனையாளரும், கார் டிரைவரும் நேற்று மாலை காரில் கொண்டு சென்றனர்.
    • ஆர்டர் செய்திருந்த நகைகளை விற்பனையாளர் மட்டும் சென்று கொடுத்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது ரூ.7 கோடி மதிப்பிலான வைர நகைகளுடன் கார் டிரைவர் மாயமானது தெரியவந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மாதப்பூர் மைஹோம் பூஜா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ராதிகா.

    இவர் மாதப்பூரில் நகைக் கடை நடத்தி வருகிறார். ஆர்டரின் பெயரில் நகை கடைகளுக்கு மொத்தமாகவும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நகைகளை சப்ளை செய்து வந்தார். இவரிடம் அக்சய் (வயது 30) என்ற விற்பனையாளரும், சீனிவாஸ் (26) என்ற கார் டிரைவரும் வேலை செய்து வந்தனர்.

    நகைக் கடை உரிமையாளரிடம் ஆர்டர் கொடுக்கும் நகைகளை அக்சய் மற்றும் சீனிவாஸ் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று சப்ளை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நகை கடை உரிமையாளர் வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த அனுஷா என்பவர் ரூ.50 லட்சத்திற்கு நகைகளை ஆர்டர் செய்து இருந்தார். மதுரா நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற அனுஷா நகைகளை அங்கு அனுப்பி வைக்குமாறு கூறினார்.

    இதையடுத்து அனுஷாவிற்கு கொடுக்கவேண்டிய ரூ 50 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.7 கோடி மதிப்பிலான வைர நகைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுப்பதற்காக விற்பனையாளரும், கார் டிரைவரும் நேற்று மாலை காரில் கொண்டு சென்றனர். அனுஷாவின் உறவினர் வீட்டிற்கு சென்று அவர் ஆர்டர் செய்திருந்த நகைகளை விற்பனையாளர் மட்டும் சென்று கொடுத்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது ரூ.7 கோடி மதிப்பிலான வைர நகைகளுடன் கார் டிரைவர் மாயமானது தெரியவந்தது.

    இது குறித்து அக்சய் நகைக்கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். எஸ்.ஆர்.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.ஆர்.எஸ் கருவி உதவியுடன் கார் எங்கு உள்ளது என தேடி வருகின்றனர்.

    மேலும் கார் டிரைவர் காரை எங்கேயாவது விட்டுவிட்டு நகைகளுடன் தலைமறைவாகி விட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×