search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரிகள் மகிழ்ச்சி"

    • நாளை (புதன்கிழமை) ஆடி மாதம் 18- ம் பெருக்கு மற்றும் திருவிழா காலம் என்பதால் சேலத்துக்கு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.
    • கடந்த வாரத்தைவிட பூக்கள் விலை உயர்ந்து விற்பனையும் அதிகரித்துள்ளது.

    அன்னதானப்பட்டி:

    ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இதனால் ஆடி மாதத்தில் அனைத்து கோவில்களிலும் திருவிழா களை கட்டும். நாளை (புதன்கிழமை) ஆடி மாதம் 18- ம் பெருக்கு மற்றும் திருவிழா காலம் என்பதால் சேலத்துக்கு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் பூக்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது .

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை விவரம் ( 1 கிலோ கணக்கில்) வருமாறு:-

    மல்லிகை - ரூ.1000, முல்லை - ரூ.600, ஜாதி மல்லி - ரூ.400, காக்கட்டான் - ரூ.360, கலர் காக்கட்டான் - ரூ.320, சி.நந்தியா வட்டம் - ரூ. 180, சம்மங்கி - ரூ.200, சாதா சம்மங்கி - ரூ.200, அரளி - ரூ.180, வெள்ளை அரளி - ரூ.180, மஞ்சள் அரளி - ரூ.180, செவ்வரளி - ரூ.200, ஐ.செவ்வரளி - ரூ.200, நந்தியா வட்டம் - ரூ.180, கடந்த வாரத்தைவிட பூக்கள் விலை உயர்ந்து விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    ×