search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபருக்கு ஆயுள் தண்டனை"

    • திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பு
    • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

    திருப்பத்தூர்:

    திருவள்ளூர் மாவட் டம், திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 40). இவர் சென்னை ஆவடி யில் உள்ள தனியார் கம் பெனியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான வர லட்சுமி (30) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்குமுன்பு திருமணம் நடந்தது.

    இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக் கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வரலட்சுமியின் தந்தை தீனதயாளன் இறந்து விட்டதால் ஆம்பூர் ஆடுத்த பாங்கிராபாத் புதுமனை பகுதியில் உள்ள அவரது சித்தப்பா பார்த்திபன் (50) வீட்டில் தங்கி இருந்தார்.

    கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி காளிதாஸ் ஆம்பூருக்கு சென்று பார்த்திபனிடம் என் மனைவிக்கு ஏன் அடைக்கலம் கொடுக்கி றாய் எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த காளிதாஸ், பார்த்திபனை சரமாரியாக தாக்கி அருகில் இருந்த கருங்கல்லை எடுத்து பார்த்திபன் தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.

    இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் வழக்கு நடை பெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜா வாதாடினார்.

    இந்நிலையில், காளிதாசுக்கு ஆயுள் தண்ட னையும், ரூ.76, ஆயிரம் அபராதமும் மற்றும் அத்து மீறி பார்த்திபன் வீட்டிற்குள் சென்று தகராறில் ஈடுபட்டதற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பளித்தார்.

    உமராபாத் போலீசார் காளிதாசை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    ×