search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வானதி சீனிவாசன் பேட்டி"

    • கோவை தெற்குதொகுதி எம்.எல்.ஏ. வானதிசீனிவாசன் நேற்றிரவு பழனிக்கு வந்தார். பெரியநாயகிஅம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்துவிட்டு இன்று காலை மலைக்கோவிலுக்கு சாமிதரிசனம் செய்ய வந்தார்.
    • ஆகமவிதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் புகார் வந்துள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்கவேண்டும். கும்பாபிஷேகம் அவரச கதியில் நடத்தப்பட்டதாக புகார் வந்துள்ளது

    திண்டுக்கல்:

    கோவையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாதயாத்திரை தொடங்கிய கோவை தெற்குதொகுதி எம்.எல்.ஏ. வானதிசீனிவாசன் நேற்றிரவு பழனிக்கு வந்தார். பெரியநாயகிஅம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்துவிட்டு இன்று காலை மலைக்கோவிலுக்கு சாமிதரிசனம் செய்ய வந்தார்.

    அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    ஈரோடு தொகுதியில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து கட்சி தலைைம அறிவிக்கும் முடிவுக்கு நாங்கள்கட்டுப்படுவோம். காய்த்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகிய பிறகு அவர் தெரிவிக்கும் கருத்துகள் வேதனையளிக்கும் வகையில் உள்ளது.

    பழனி கோவில் கும்பாபிஷேகத்தில் கருவறைக்குள் அரசியல் கட்சியினர் புகுந்ததாகவும், ஆகமவிதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் புகார் வந்துள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்கவேண்டும். கும்பாபிஷேகம் அவரச கதியில் நடத்தப்பட்டதாக புகார் வந்துள்ளது. தங்களுக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறும் அரசியல் கட்சியினர் குடும்ப உறுப்பினர்களை கோவில்களுக்கும், கும்பாபிஷேகத்திற்கும் அனுப்பி வருவதுவேடிக்யைாக உள்ளது.

    மக்கள் உணர்வுகளை மதிக்க வேண்டும். இந்துமத கோவில்களை இடித்தேன் என்று கூறுபவர்கள் இதேபோல மற்ற மதத்தினர் வழிபடும் இடங்களை இடித்தேன் என்று சொல்ல முடியுமா, வெளிநாடுகளில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடங்களை கோர்ட்டில் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற கட்டிடங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளது. தி.க., தி.மு.க போன்ற கட்சிகள் ஆன்மீக வழிபாட்டில் இரட்டை நிலையை கடைபிடித்து வருகிறது. கோவிலுக்கு வரும்போது ஒரு விதமாகவும், கோவிலை விட்டு செல்லும்போது வேறுவிதமாகவும் பேசி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×