search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன உயிரின கண்காட்சி"

    • வனங்கள் தொடர்பான பல்வேறு வகையான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
    • பயனுள்ள வகையிலும், பொழுதுபோக்கு நிறைந்ததாகவும் நடைபெற்று வரும் இந்த கண்காட்சி 12-ந் தேதி (நேற்று), முடிவடைவதாக இருந்த நிலையில் வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஓசூர்,

    ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    "ஓசூர் வனக்கோட்டத்தில், வன உயிரின வார விழாவினை கொண்டாடும் வகையில், வனங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாப்பது குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்,பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2-ந் தேதி முதல், மாவட்ட வன அலுவலக வளாகத்தில் வன உயிரின கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை பார்ப்பதற்கு முன்பாக, பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் வீடியோக்கள் மூலமாகவும், பவர்பாயிண்ட் மூலமும் அனுபவமுள்ள வன அலுவலர்களால் விளக்கம் தரப்படுகிறது. மேலும் இந்த கண்காட்சியில், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள சிறுத்தைகளின் உருவ பொம்மைகள், பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள யானைக்கன்று, மான் கன்றுகள் யானையின் மண்டை ஓடு, மற்றும் பல்வேறு வகையான வன விலங்குகளின் அரிய புகைப்படங்கள் மற்றும் இயற்கை வளங்கள் அடங்கிய வரைபடங்கள், மனித யானை மோதல்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் சாதனங்கள், சிறுவன மகசூல் பொருட்கள், மர வகைகள் மற்றும் வனங்கள் தொடர்பான பல்வேறு வகையான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    பயனுள்ள வகையிலும், பொழுதுபோக்கு நிறைந்ததாகவும் நடைபெற்று வரும் இந்த கண்காட்சி 12-ந் தேதி (நேற்று), முடிவடைவதாக இருந்த நிலையில் வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓசூர் பஸ் நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் மத்திகிரி அருகேயுள்ள மாவட்ட வன அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட் இந்த கண்காட்சியை அனைவரும் இலவசமாக கண்டு ரசித்து செல்லலாம்". இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில், வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் தெரிவித்துள்ளார்.

    ×