search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காள தேச கிரிக்கெட் வாரியம்"

    வங்காள தேச கிரிக்கெட் வாரியம் ஜிம்பாப்வேயிற்கு எதிரான தொடரின்போது 3-வது டெஸ்ட் கிரிக்கெட் மைதானத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. #BANvZIM
    ஆசிய அணிகளில் ஒன்றான வங்காள தேசம் கிரிக்கெட்டில் முன்னேற்றம் கண்டு வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது டெஸ்டில் ஆர்வம் காட்டி வருகிறது.

    வங்காள தேசத்தில் டாக்கா மற்றும் சிட்டகாங் மைதானத்தில் தற்போது டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் - நவம்பரில் ஜிம்பாப்வே அணி வங்காள தேசம் செல்கிறது. அப்போது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    முதல் டெஸ்ட் நவம்பர் 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடக்கிறது. இந்த ஆட்டம் முதன்முதலாக சியல்ஹெட் மைதானத்தில் நடக்கிறது. இதற்கு முன் சியல்ஹெட்டில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது கிடையாது. ஏழு டி20 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டி மூலம் புதிய மைதானத்தை அறிமுகப்படுத்துகிறது.
    ×