search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம்"

    • கோர்ட்டு உத்தரவையடுத்து 2015, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் அணையின் நீர் மட்டம் 142 அடி வரை நிலை நிறுத்தப்பட்டது.
    • அடுத்த ஆண்டு ஜூன் 9-ந் தேதி வரை அணையில் 142 அடி தண்ணீர் தேக்க அனுமதி அளிக்கப்பட்டு ள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை ப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இரு போக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் மதுரை, தேனி மாவட்ட குடிநீர் ஆதார மாகவும் உள்ளது.

    152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. மேலும் பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள லாம் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து 2015, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் அணையின் நீர் மட்டம் 142 அடி வரை நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நீர் மட்டத்தை 140 அடியாக குறைக்க வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தி வருகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு பருவமழை காலத்தில் தண்ணீர் தேக்கும் ரூல் கர்வ் முறைப்படி நீர் மட்டத்தை 142 அடியாக மத்திய நீர் வள ஆணையம் நிர்ண யித்தது. ஆனால் கேரள அரசு இதை ஏற்க மறுத்து 140 அடியாக குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் கேரளாவில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது என கேரள அரசு வாதத்தை முன் வைத்தது. பின்னர் மத்திய நீர் வள ஆணையம் ரூல் கர்வ் முறைப்படி நீர் மட்டத்தை 140 அடியாக நிர்ணயம் செய்தது.

    ஜனவரி 10-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை தண்ணீர் தேக்கும் அளவை நிர்ணயித்து கால அட்டவணை வெளியிட ப்பட்டது. அதன்படி ஜனவரி 10-ந் தேதி முதவ் 10 நாளுக்கு ஒரு முறை வீதம் நவம்பர் 30-ந் தேதி வரை தண்ணீர் தேக்கும் அளவு குறித்து கால அட்டவணை யால் கடந்த ஆகஸ்டு மாதம் அணையின் நீர் மட்டம் 138 அடியாக உயர்ந்த நிலையில் கேரளாவுக்கு கூடுதல் உபரிநீர் திறக்கப்பட்டது.

    தற்போது மீண்டும் மழை பெய்து அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நவம்பர் 30-ந் தேதியுடன் கால அட்டவணை முடிவடைந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் 9-ந் தேதி வரை அணையில் 142 அடி தண்ணீர் தேக்க அனுமதி அளிக்கப்பட்டு ள்ளது. எனவே மீண்டும் அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து ள்ளனர். இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 139 அடியாக உள்ளது. 1123 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணை நீர் மட்டம் 66.21 அடியாக உள்ளது. 1112 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்து க்காக 1719 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர் மட்டம் 54.90 அடியாக உள்ளது. 100 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.57 அடியாக உள்ளது. 146 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    ×