search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதன்மை தேர்வு பயிற்சி வகுப்பு"

    • திருச்சி என்.ஐ.டி. ஆசிரியர் சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதன்மை தேர்வு குறித்த இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட்டது
    • இதில் 11 மற்றும் 12-ம் வகுப்பைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்களும் 9 மற்றும் பத்தாம் வகுப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்

    திருச்சி:

    திருச்சி என்.ஐ.டி. கல்லூரி ஆசிரியர் சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் கூட்டு நுழைவு தேர்வு முதன்மை தேர்வு மற்றும் உயர்நிலை தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் என்.ஐ.டி. ஆசிரியர் சங்கம் முயற்சியின் கீழ் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 30 அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    2021 முதல் இந்த முயற்சி திருநெல்வேலி மாவட்டத்தில் விரிவுபடுத்தப்பட்டு அந்த மாவட்டத்தைச் சேர்ந்த 30 அரசு பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் தலா ஒரு மாணவர் மற்றும் திருச்சி என்.ஐ.டி. கல்லூரியில் இரண்டு மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

    இந்த பயிற்சியானது 9-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. என்.ஐ.டி. கல்லூரி ஆசிரியர் சங்கம் சார்பில் 12 இளங்கலை மாணவர்கள் கொண்ட குழு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, ராஜகோபாலபுரம் மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி திட்ட அமர்வை நடத்தினர்.

    இதில் 11 மற்றும் 12-ம் வகுப்பைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்களும் 9 மற்றும் பத்தாம் வகுப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர். இதன் மூலம் வருங்காலத்தில் அந்த மாணவர்கள் தங்களுக்கு சரியான வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதுடன் பொறியியல், மருத்துவம், வணிகம் சட்டம், வடிவமைப்பு போன்ற துறைகளில் உள்ள வாய்ப்புகள் பற்றி தகவல் அவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை என்.ஐ.டி. கல்லூரி ஆசிரியர் சங்கம் சார்பாக பள்ளி நிர்வாகங்கள் மற்றும் என்.ஐ.டி. இயக்குனர் அகிலா, மாணவர்கள் நலன் டீன் குமரேசன், என்.ஐ.டி. கல்லூரி ஆசிரியர் சங்க ஆலோசகர்கள் மஞ்சுளா, செல்வகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×