search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டைகள் தேக்கம்"

    • முட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் பண்ணையாளர்கள் விலையை குறைக்க தொடங்கினர்.
    • முட்டை விற்பனை அதிகரித்தாலும் கோடிக்கணக்கான முட்டைகள் தேங்கியுள்ளன.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. அதன் மூலம் 5 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு தினமும் 4 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    முட்டைகளின் பண்ணை விற்பனை விலை கடந்த மாதம் 9-ந் தேதி 565 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் முட்டை விற்பனை வரலாற்றில் அது மிக அதிகபட்ச விலை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், அசைவப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தொடர்ந்து 12 நாட்கள் இதே நிலை நீடித்ததால் முட்டையின் விற்பனையில் சரிவு ஏற்பட்டது. இதனால் நாமக்கல் கோழிப்பண்ணைகள் மற்றும் குடோன்களில் கோடிக்கணக்கான முட்டைகள் தேங்க தொடங்கின.

    இதையடுத்து முட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் பண்ணையாளர்கள் விலையை குறைக்க தொடங்கினர். முட்டையின் பண்ணை விற்பனை விலை 565 காசுகளில் இருந்து படிப்படியாக சரிந்து 460 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த மாதம் 30-ந் தேதி முதல் தற்போது வரை 460 காசுகளாக முட்டை விலை நீடிக்கிறது.

    முட்டை விற்பனை அதிகரித்தாலும் கோடிக்கணக்கான முட்டைகள் தேங்கியுள்ளன. முட்டை விலை குறைந்துள்ளதால் தினமும் 5 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கோழி பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது, முட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை விலை குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது விற்பனை அதிகரித்தாலும் விலை குறைப்பால் தினமும் சராசரியாக 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை நஷ்டமாகிறது.

    தொடர்ந்து இதே நிலை நீடித்தால் கோழி பணியாளர்களுக்கு தாங்க முடியாத அளவுக்கு இழப்பு ஏற்படும். தீவனங்கள் உட்பட முட்டை உற்பத்தி உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளதால் நியாயமான விலை தொடர்ந்தால் மகிழ்ச்சி அடைவோம்.

    இவ்வாறு கோழி பண்ணையாளர்கள் கூறியுள்ளனர்.

    ×