என் மலர்
நீங்கள் தேடியது "மடிக்கணினி திருட்டு"
- கவுசல்யா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
- குன்னூர் சோமர் சேட் பெட்ரோல் பங்க் அருகே பஸ் வந்த போது தனது பையை சோதனை செய்தார்.
ஊட்டி,
நாமக்கல்லை சேர்ந்தவர் கவுசல்யா. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் நாமக்கல்லுக்கு வந்தார். பின்னர் சம்பவத்த ன்று குன்னூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நாமக்கல்லில் இருந்து அரசு பஸ்சில் சென்றார். அப்போது குன்னூர் சோமர் சேட் பெட்ரோல் பங்க் அருகே பஸ் வந்த போது தனது பையை சோதனை செய்தார். அப்போது அதில் வைத்திருந்த மடிக்கணினி மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் பஸ்சில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. யாரோ மர்மநபர் அவரது லேப்டாப்பை திருடி சென்றது தெரியவந்தது.இதையடுத்து கவுசல்யா சம்பவம் குறித்து குன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லேப்டாப்பை திருடிய நபரை தேடி வருகின்றனர்.






