search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் ஆதரவு"

    • வைத்தீஸ்வரன் ேகாவில் பேரூர்க திமுக வாக்குசாவடி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கடந்த சட்டபேரவை தேர்தலுக்கு பின்னர் 30சதவீதம் தமிழக முதல்வர் மீது மக்கள் ஆதரவு கூடியுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி நகர, மேற்கு ஒன்றிய, வைத்தீஸ்வரன் ேகாவில் பேரூர் கழக திமுக வாக்குசாவடி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மயிலாடு துறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டபேரவை உறுப்பினருமான நிவேதா.எம்.முருகன் தலைமை வகித்தார்.

    ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் தியாக விஜயேல்வரன், அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன், நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் சுப்பராயன் வரவேற்றார்.

    சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செ ல்வம், திமுக தலைமை பொது குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், சீர்காழி சட்டபேரவை தொகுதி தலைமை பொறுப்பாளர் மண்னை.சோழராஜன் கலந்துகொண்டு பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக சுற்றுசூழல்,காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று பேசுகையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் பல அரசியில் கட்சி இருக்கும் இடம் தெரியவில்லை.

    கடந்த சட்டபேரவை தேர்தலுக்கு பின்னர் 30சதவீதம் தமிழக முதல்வர் மீது மக்கள் ஆதரவு கூடியுள்ளது.

    நாதல்படுகை, முதலைமேடு திட்டு கிராமங்களில் கொள்ளிடம் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்படுவதை அறிந்து ரூ.16கோடியில் பேரிடர் மீட்பு மையம் அமைத்திட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

    கடந்த ஆட்சி காலங்களில் அரசியல் கட்சியினர் வருகைபுரிந்து ஆறுதல் கூறி சென்றனர் எனவும், நிரந்தர தீர்வு ஏற்படுத்தவில்லைஎன அப்பகுதி மக்கள் கூறினர். ஆனால் திமுக அரசு அமைந்த பிறகு அப்பகுதி மக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் தான் உள்ளது. ஆகையால் திமுக நிர்வாகிகள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.

    இதில் திமுக நிர்வாகிகள் பெரியசாமி , செல்வ முத்துக்குமார், முருகன், பந்தல். முத்து, திருச்செல்வம், தனராஜ், துரை மற்றும் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    ×